Cinema History
ஆரம்பக்கட்டத்துல தமிழ் சினிமா ரஜினிக்கு சோறு கூட போடல.. இந்த சம்பவம் தெரியுமா?
தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களில் டாப் லெவலில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவரது கண்ணசைவில் தமிழ் சினிமா அவருக்காக பணிப்புரிய காத்துள்ளது என கூறலாம். வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார் ரஜினி. தற்சமயம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் சினிமா இந்தளவிற்கு அவருக்கு ஆதரவாக இல்லை. ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அளவிலேயே முதல் முறையாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் ரஜினி.
படங்களில் சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தால் கூட அதில் நடிக்க வேண்டும் என்கிற ஆவலோடு சினிமாவிற்குள் வந்தார். அப்போது நடிகர் குமரிமுத்துவும் சின்ன லெவல் நடிகர்களில் ஒருவராக இருந்தார். நடிகர்களுக்கு வகை பிரித்துதான் அப்போதெல்லாம் உணவு போடுவார்கள்.

அதில் பெரிய நடிகர்களுக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும். அதற்கு பிறகு இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என இரண்டு வகையில் உணவு கிடைக்கும். மூன்றாம் நிலை ஊழியர்களுக்கு மீன், கறி எதுவும் இருக்காது. சாப்பாட்டோடு ஒரு அவித்த முட்டை மட்டுமே இருக்கும்.
அப்போது ரஜினிகாந்த், குமரி முத்து எல்லாம் மூன்றால் நிலை ஊழியர்களாக இருந்தனர். சாப்பிட அமர்ந்த ரஜினிகாந்த் முட்டை வைப்பவரிடம் இன்னொரு முட்டை கிடைக்குமா? என கேட்டுள்ளார். அதற்கு சப்ளை செய்யும் பையன் முட்டையெல்லாம் ஒன்னும் இல்லை என ரஜினியை கேவலப்படுத்தியுள்ளார்.
பிறகு அதை கண்டுக்கொள்ளாமல் சாதரணமாக சாப்பிட்டுவிட்டு எழுந்துள்ளார் ரஜினிகாந்த். இந்த நிகழ்வை ஒரு பேட்டியில் குமரி முத்துவே பகிர்ந்துள்ளார்.
