Connect with us

தயவு செஞ்சு என்னை மன்னிச்சுடுங்க சார்!.. உதாசீனப்படுத்திய விநியோகஸ்தரை கதற விட்ட சசிக்குமார்.. என்ன நடந்தது?

sasikumar

News

தயவு செஞ்சு என்னை மன்னிச்சுடுங்க சார்!.. உதாசீனப்படுத்திய விநியோகஸ்தரை கதற விட்ட சசிக்குமார்.. என்ன நடந்தது?

Social Media Bar

தமிழ் சினிமாவில் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என்று பன்முக தன்மை கொண்ட சில பிரபலங்களில் முக்கியமானவர் சசிகுமார். இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சசிகுமார் அதனை தொடர்ந்து இயக்குனராக ஆசைப்பட்டார்.

அப்படி அவர் இயக்கிய திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் சுப்பிரமணியபுரம் திரைப்படம். ஏனெனில் அப்போதே அந்தப் படத்தை தயாரித்து இயக்கி அதில் நடித்திருந்தார் சசிகுமார். சுப்பிரமணியபுரம் திரைப்படம் ஒரு எதிர்மறையான கிளைமாக்ஸ் கொண்ட திரைப்படம் ஆகும் இந்த படம் எடுப்பது என்பதே சசிக்குமாருக்கு பெரிய ரிஸ்க் என்று கூறலாம்.

படத்தை எடுத்து முடித்த பிறகு இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. அதற்கு ஏற்றார் போல படத்தை எந்த விநியோகஸ்தர்களும் வாங்க மறுத்துவிட்டனர். திரையரங்குகளும் அந்த படத்திற்கு மிகக் குறைவாகவே கிடைத்தது.

அந்த படத்திற்காக சசிகுமார் 65 லட்சம் செலவு செய்திருந்தார். அப்போதைய காலகட்டத்தில் அது சசிகுமாருக்கு மிகப்பெரிய தொகையாகும். இந்த நிலையில் படம் முதல் நாள் ஓடியது. அப்பொழுது தமிழில் முக்கிய விநியோகஸ்தரான ரவீந்திரன் அந்த திரைப்படத்தை பார்த்தார்.

பார்த்தவுடனேயே அந்த திரைப்படம் எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்பதை அவர் கணித்து விட்டார். அதற்கு முன்பு சசிகுமாரை உதாசீனப்படுத்தின ரவீந்திரன் அவரே பிறகு வேகவேகமாக சசிகுமார் அலுவலகத்திற்கு சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டு படத்தை வாங்கி அதிக திரையரங்குகளில் வெளியிட்டார்.

அந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரிதாக ஓடியது கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்தது சுப்பிரமணியபுரம் திரைப்படம்.

Articles

parle g
madampatty rangaraj
To Top