Cinema History
அந்த ஒரு படம் நடிச்சதுக்காக எனக்கு திருட்டு பட்டம் கட்டி காலி பண்ணிட்டார்!.. தம்பி ராமய்யா பற்றி கூறிய கும்கி நடிகர்!.
சினிமாவில் பல காலங்களாக பல்வேறு துறைகளில் பணியாற்றி வருபவர் தம்பி ராமய்யா. முதலில் தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. ஆனால் இயக்குனராக அவரால் சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை.
இதனை தொடர்ந்து வடிவேலு காமெடிகளில் அவருக்கு காமெடியனாக வாய்ப்புகள் கிடைத்தன. அதில் அவருக்கு வரவேற்புகள் வர துவங்கின. தொடர்ந்து காமெடி நடிகராக நடித்து வந்த தம்பி ராமய்யாவிற்கு வாய்ப்பு கொடுத்தார் இயக்குனர் பிரபு சாலமன்.
அவரது முதல் படமான மைனா திரைப்படத்திலேயே தம்பி ராமய்யாவிற்கு மிக முக்கியமான கதாபாத்திரத்தை வழங்கியிருந்தார் பிரபு சாலமன். அந்த சமயம் முதலே தம்பி ராமய்யாவிடம் ஓட்டுநராக பணிப்புரிந்து வந்தார் சுப்பையா என்னும் நபர்.
இந்த நிலையில் கும்கி திரைப்படம் படமாக்கப்பட்டப்போது அதில் ஒரு ஜோசியக்காரர் கதாபாத்திரத்திற்கு சரியான ஆள் கிடைக்காமல் இருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த ஓட்டுநர் சுப்பையா இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று நினைத்தார் பிரபு சாலமன்.
அதனையடுத்து அவரை ஜோசிக்காரராக நடிக்க வைத்தனர். அந்த கதாபாத்திரத்தை சுப்பையா சிறப்பாக நடித்தார். மேலும் படம் வெளியானப்போது அது ஒரு பேசப்படும் கதாபாத்திரமாக அமைந்தது. இதனையடுத்து அதனால் தம்பி ராமய்யாவிற்கு சுப்பையா மீது கோபம் வந்தது.
இந்த நிலையில் தன்னுடைய நகையை அவர் திருடிவிட்டதாக குற்றம் சாட்டி சுப்பையாவை வேலையில் இருந்து நீக்கியுள்ளார் தம்பி ராமய்யா. இந்த விஷயத்தை சுப்பையா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
Source – Click here
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்