Latest News
கமலுக்கும் அந்த படத்துக்கும் தொடர்பில்லை!.. மலையால சினிமாவை கமல் சாரே வளர விட மாட்டார்!.. மஞ்சுமல் பாய்ஸ் வசனகர்த்தா ஓப்பன் டாக்!..
Manjummel Boys : தமிழ் சினிமா மக்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பு பெற்ற திரைப்படமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இருக்கிறது. அது ஒரு மலையாள படம் என்பதை மறந்து அதை ஒரு தமிழ் படமாக நினைத்தே தான் பார்த்து வருகின்றனர் தமிழ் ரசிகர்கள்.
படத்திற்கு வசனத்தை எழுதிய க்ளைட்டன் என்பவரிடம் பேட்டி எடுக்கும் பொழுது அவர் நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை கூறியிருந்தார். சொல்ல போனால் அவரே தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான். அவர் கூறும் பொழுது படத்தின் பாதி காட்சிகள்தான் கேரளாவில் நடக்கின்றன.
அதற்குப் பிறகு முழுக்க முழுக்க கொடைக்கானலில்தான் படம் நடக்கிறது எனவே இந்த திரைப்படம் ஒரு மலையாள படம் என்கிற நினைப்பே முதலில் பார்க்கும் மக்களுக்கு வரவில்லை. அதே போல கேரளாவில் இருக்கும் நிறைய பேருக்கு குலதெய்வமாக பழனி முருகன்தான் இருக்கிறார். எனவே இந்த திரைப்படம் முழுக்கவும் பழனி முருகன் கொடைக்கானல் அது இல்லாமல் குணா படத்தில் வரும் இளையராஜா பாடல் இப்படி தமிழ் சார்ந்து தான் எக்கச்சக்கமான விஷயங்கள் இருக்கின்றன.
இவை யாவும் தமிழ்நாட்டு மக்களுக்கு இது ஒரு தமிழ் படம் என்கிற மனநிலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதுதான் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பெரிய காரணம். இளையராஜாவின் பாடலும் ஒரு முக்கிய காரணம் என்று கூற வேண்டும் ஏனெனில் மலையாளிகள் இளையராஜாவின் பாடலை ரசித்து கேட்பதாக காட்சிகள் வைப்பதும் கூட தமிழ் மக்களுக்கு ஒரு பெருமிதத்தை ஏற்படுத்தும்.
அந்த திரைப்படத்தில் காவலர்கள் அந்த மலையாள நண்பர்களை மோசமாக நடத்துவது போன்ற காட்சிகளுக்கு நிறைய அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் படத்தில் தமிழர்கள் மலையாளிகள் என்கிற வேறுபாட்டை காட்டுவதற்காக அப்படி காட்சிகள் அமைக்கப்படவில்லை.
அவர்கள் தடை செய்யப்பட்ட ஒரு பகுதிக்குள் அத்து மீறி சென்றதால் அந்த காவலருக்கு வரும் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவே அந்த காட்சிகள் வைக்கப்பட்டன என்று கூறுகிறார் க்ளைட்டன். மேலும் அவர் கூறும் பொழுது இந்த படத்திற்காக எதற்கு கமல்ஹாசனை கொண்டாடுகிறார்கள் என்று தெரியவில்லை.
ஏனெனில் கமல்ஹாசனின் நடிப்பிற்கும் இந்த படத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை. குணா படத்தை பாராட்ட வேண்டும் என்றால் அந்த படத்தின் இயக்குனரைதான் கொண்டாட வேண்டுமே தவிர கமலஹாசன் எதற்கு கொண்டாடுகிறார்கள் என்று தெரியவில்லை. அதேபோல மலையாள சினிமா தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து விட்டது என்று கூறுகிறார்கள்.
இந்த படம் தமிழ் திரைப்படமாக தோன்றுவதால் மக்கள் இதை பார்க்கிறார்களே தவிர அனைத்து மலையாள திரைப்படத்தையும் மக்கள் பார்க்க போவதில்லை அப்படியான ஒரு சூழல் ஏற்பட்டால் கமலே கூட தமிழ் சினிமாவிற்குள் மலையாளம் வருவதற்கு அனுமதிக்க மாட்டார் என்று கூறுகிறார் க்ளைட்டன்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்