Hollywood Cinema news
வயிறு வழிக்க சிரிக்க வைக்கும் ஹாலிவுட் கார்ட்டூன் திரைப்படம் – மிட்சில் வெர்சஸ் மெஷின் திரைப்பட விமர்சனம்!
ஒவ்வொரு வருடம் குழந்தைகளுக்கான சிறப்பான கார்ட்டூன் படங்களை எடுத்து வெளியிடுவது என்பது ஹாலிவுட் சினிமாவின் முக்கியமான வேலையாகும்.
அந்த வகையில் 2021 இல் வெளியான மிகவும் குதுகலமான நகைச்சுவையான திரைப்படம்தாம் மிட்சில் வெர்சஸ் மெஷின் என்கிற இந்த ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படம்.
இந்த படத்தின் இயக்குனர் மிச்சேல் ரியாண்டா, தனது வாழ்வில் அவரது குடும்பத்தின் இனிமையான நினைவுகளை ஒரு கற்பனை கதைக்குள் புகுத்தி இந்த கதையை எடுத்திருக்கிறார் என கூறலாம்.
படம் அதிகமான நகைச்சுவை காட்சிகளை கொண்டு மிகவும் சுவாரஸ்யமாக சென்றது. இந்த படம் இதுவரை 46 விருதுகளை உலக அளவில் பெற்றுள்ளது.
ஒரு குடும்பத்தின் கதைதான் இந்த படம். கேட்டி என்கிற பெண் சிறு வயது முதலே படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் அவரது வீட்டில் அதற்கு எந்த ஒரு ஆதரவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கலிபோர்னியாவில் உள்ள பட இயக்கம் தொடர்பான ஒரு பள்ளிக்கு செல்வதன் மூலம் தனது கனவை அடையலாம் என நினைக்கிறார் கேட்டி.
அவரது மனநிலையை புரிந்துக்கொண்ட அவரது குடும்பம், காரில் குடும்பமாக சென்று அவரை கலிபோர்னியாவில் விடுவதற்கு ஏற்பாடு செய்கின்றனர். இந்த நிலையில் பேல் என்கிற செயற்கை நுண்ணறிவு ஒன்று இந்த உலகத்தை கைப்பற்ற நினைக்கிறது. எனவே உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் சிறைப்பிடிக்க ரோபோ ஆர்மியை அனுப்புகிறது.
அந்த ரோபோ ஆர்மியிடம் இருந்து கேட்டியின் குடும்பம் மட்டும் தப்பிக்கிறது. ஏனைய மனிதர்கள் அனைவரும் கைது செய்யப்படுகின்றனர். எனவே இந்த பிரச்சனையை சரி செய்யும் பொறுப்பு இந்த குடும்பத்திற்கு வருகிறது. இத்தனை கருத்து வேறுபாடுகளுக்கு நடுவே கேட்டி அவளது குடும்பத்துடன் இணைந்து எப்படி இவற்றை சரி செய்ய போகிறாள் என்பதே கதை.
இந்த போராட்டங்களுக்கு நிலையில் கேட்டிக்கு அவள் குடும்பத்துடன் உள்ள உறவு எந்த நிலைக்கு செல்கிறது என்பதையும் படம் விளக்குகிறது. இந்த நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் தமிழில் கிடைக்கிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்