News
நீ வரலைனா அந்த சீனையே தூக்கிடுவேன்! – வடிவேலுவிற்கு வார்னிங் கொடுத்த இயக்குனர்!
சினிமாவில் மிகப்பெரும் நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. ஆனால் சில காலங்களாக வடிவேலுவின் நடைமுறைகள் சினிமாவில் சரியில்லை என்கிற வாதம் பரவலாக இருந்து வருகிறது.

ஏற்கனவே 24 ஆம் புலிகேசி படத்திற்கான வேலைகள் எல்லாம் துவங்கி இறுதியில் வடிவேலுவிற்கும் இயக்குனர் சிம்பு தேவனுக்கும் பிரச்சனை ஆனதில் அந்த படத்தை இறுதி வரை முடிக்க முடியாமல் போனது.
தற்சமயம் அவர் நடித்து நாய சேகர் ரிட்டன்ஸ் என்கிற படம் வர இருக்கிறது. அதே போல சந்திரமுகி 2 திரைப்படத்திலும் வடிவேலு நடித்து வருகிறார். சந்திரமுகி படத்தில் ஒரு 15 நிமிடத்திற்கு வடிவேலுவிற்கு ஒரு பெரிய நகைச்சுவை காட்சி இருந்ததாம். அதற்கான ஷூட்டிங் 3 நாட்களுக்கு இருந்ததாம்.
இந்த நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் ஒரு பாடல் மட்டும் எடுக்க வேண்டி இருந்ததாம். சந்திரமுகியில் 2 நாள் ஷூட்டிங் முடிந்த நிலையில், நாய் சேகர் பாடலுக்கு நடித்து கொடுக்க கிளம்பினாராம் வடிவேலு.
இரண்டு நாள் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மூன்றாவது நாளையும் முடித்து கொடுத்துவிட்டு நாய்சேகர் படத்திற்கு நடித்து கொடுக்க செல்லுங்கள் என இயக்குனர் பி.வாசு கூற, அதெல்லாம் முடியாது என கிளம்பியுள்ளார் வடிவேலு.
இதனால் கோபமான பி.வாசு அந்த நகைச்சுவையை காட்சி படத்திற்கு வேண்டாம் என கூறி நீக்கிவிட்டாராம்.
