எக்ஸ்ட்ரா டைம்க்கே வேலையில்லை.. படக்குழுவை தொங்கலில் விட்ட வேல்டு நடிகர்.. கண்ணீர் வடிக்கும் தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றால் அடுத்ததாக அந்த படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என வரிசையாக படங்கள் எடுத்து வெளியிடுவது வழக்கமான ஒன்று தான்.

அந்த வகையில் தமிழில் பல படங்கள் பாகங்களாக வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதும், ஒரு சில படங்கள் தோல்வியில் முடிவதும் வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது.

ஆனால் ஒரு சில படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும் என நினைக்கும் போது அந்த படம் படுதோல்வி அடைந்து ரசிகர்களை ஏமாற்றி இருக்கும். இதனால் வெறுப்பான நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருவார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல பெரிய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளரை ஒரு பிரம்மாண்ட இயக்குனர் ஓட விட்டு இருக்கிறார் என்ற செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

பிரம்மாண்ட இயக்குனர் மற்றும் வேல்ட் நடிகர்

பொதுவாக குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் பார்க்கும் படங்களை தான் இயக்குனர்களும், தயாரிப்பாளரும் விரும்புவார்கள். ஆனால் இந்த இயக்குநரிடம் சென்றால் குறைந்த அளவு பட்ஜெட் படங்களை கூட தேவையில்லாமல் பல பாடல்களையும், காட்சிகளையும் வைத்து செலவில் இழுத்து விட்டு விடுவார்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த ஒரு சில படங்களில் ஏன் இந்த பாடல் எதற்காக இவ்வளவு செலவு செய்து இந்த பாடலை எடுக்க வேண்டும் என ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்படும் படி பல காட்சிகளை அதில் வைத்து அதற்கான செலவுகளையும் தயாரிப்பாளரின் தலையில் கட்டி விடுவார்.

gossips
Social Media Bar

ஆனால் சில சமயங்களில் அவரின் படங்கள் வெற்றி பெற்று அவருக்கு பேரும் புகழும் வாங்கி கொடுக்கும். மேலும் இந்த பிரம்மாண்ட இயக்குனரின் படத்தில் நடிக்க பல நடிகர்களும் வரிசை கட்டி நிற்பார்கள்.

இந்நிலையில் தான் பல கோடி செலவில் இந்த பிரம்மாண்ட இயக்குனர் வேல்ட் நடிகரை வைத்து இரண்டாம் பாகம் தயாரிக்க, அது ரசிகர்களின் மத்தியில் படுதோல்வி அடைந்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

பிரம்மாண்ட இயக்குனரின் அடுத்த டார்கெட்

பிரம்மாண்ட இயக்குனர் எதிர்பாராத விதத்தில் இந்த இரண்டாம் பாகம் தோல்வி அடைந்ததால் வேல்டு நடிகரை வைத்து அடுத்ததாக மூன்றாம் பாகத்தை எடுக்க இருப்பதாகவும், அதற்காக தயாரிப்பாளரிடம் பட்ஜெட் கூறி இருக்கிறார் என்ற செய்தியும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் பரப்பப்பட்டு வருகிறது.

தற்போது இரண்டாம் பாகத்தில் அடைந்த தோல்வியை மீட்பதற்காக மூன்றாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், இதற்காக கால்ஷீட் கேட்டு வேல்டு நடிகரிடம் சென்ற போது, அவர் தற்போது பிஸியாக நடித்து வருவதாகவும் ஒரு மணி நேரம் கூட என்னால் சும்மா தர முடியாது அதற்கான சம்பளத்தை பிரம்மாண்ட இயக்குனரிடம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

gossips

சம்பளம் எவ்வளவு வேண்டுமானாலும் தயாரிப்பாளர் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் பிரம்மாண்ட இயக்குனர் தயாரிப்பாளரிடம் கேட்க தயாரிப்பாளர் இதுக்கு மேல என்னால முடியாதுடா சாமி என்று கூறிவிட்டு ஓடிவிட்டாராம்.

பெரும் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு இந்த நிலைமையா என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில், அப்போ மூன்றாம் பாகம் அவ்வளவு தானா என பலரும் பல கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.