Tamil Cinema News
அந்த பாட்டை பாடலைனா கொளுத்திக்குவேன்!.. பெட்ரோலோடு வந்து தேவாவை மிரட்டிய நபர்!.
தமிழ் திரை இசையமைப்பாளர்களில் கானா பாடலுக்கு என்று புகழ்பெற்றவர் தேனிசைத் தென்றல் தேவா. தேவாவின் கானா பாடல்கள் எந்த காலத்திலும் மக்கள் மத்தியில் சலிக்காத பாடல்கள் எனலாம்.
இப்போது வரையில் பேருந்துகளில் அதிகமாக தேவாவின் பாடல்கள் போடுவதை கேட்கலாம். ஏனெனில் ஓட்டுநர்கள் உறக்கம் வராமல் வண்டி ஓட்டுவதற்கு தேவாவின் சுறுசுறுப்பான பாடல்கள் உதவியாக இருக்கும். அந்த அளவிற்கு கிராமத்து பாடல்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி அதை மக்கள் மத்தியில் பொதுவாக்கியவர் தேவா.
தேவாவிற்கு அதனால் அதிகமான ரசிகர்கள் அப்போது இருந்தனர். இதனால் அடிக்கடி இசை நிகழ்ச்சிகளை தேவா நடத்தி வந்தார். இப்படி ஒரு முறை இசை நிகழ்ச்சி நடத்தும் பொழுது ஒரு நபர் கையில் பெட்ரோல் கேனுடனும் ஒரு தீப்பெட்டியுடனும் வந்து நின்றார்.
அவரை பார்த்தவுடனே தேவாவிற்கு தெரிந்து விட்டது இவர் ஏதோ பாட்டு பாடச் சொல்லி மிரட்டுவதற்காகதான் வந்திருப்பார் என்று, எந்த பாடலாக இருந்தாலும் பாடி விட வேண்டியது தான் என்று தேவா இருந்தார். அப்பொழுது வந்த அவர் சலோமியா பாடலை எனக்காக நீங்கள் பாட வேண்டும்.
இல்லை என்றால் இங்கேயே கொளுத்திக் கொள்வேன் என மிரட்டி இருக்கிறார் சரி பாடலாம் என்றால் சலோமியா பாடலின் பாடல் வரிகளை எடுத்து வராமல் விட்டு விட்டனர் குழுவினர், இருந்தாலும் அந்த நபரை சமாதானப்படுத்த வேண்டி அந்த பாடலில் வரும் முதல் நான்கு வரிகளை மட்டும் பாடி சமாதானப்படுத்தி இருக்கிறார் தேவா இந்த விஷயத்தை அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
