Connect with us

ஒரு குடிகாரன் என்கிட்ட ரேட் பேசுனான்.. அன்னிக்கு அழுதுட்டேன்!.. எதிர்நீச்சல் நடிகைக்கு நடந்த கொடுமை!..

ethirneechal actress gayathri

Tamil Cinema News

ஒரு குடிகாரன் என்கிட்ட ரேட் பேசுனான்.. அன்னிக்கு அழுதுட்டேன்!.. எதிர்நீச்சல் நடிகைக்கு நடந்த கொடுமை!..

Social Media Bar

பொதுவாகவே சமூகத்திலும் சரி சினிமாவிலும் சரி அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்பது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது

இதில் சினிமா பிரபலங்களும் விதிவிலக்கல்ல. எதிர்நீச்சல், அயலி போன்ற தொடர்களில் நடித்த நடிகை காயத்ரி தனது வாழ்க்கை நிகழ்வுகளை ஒரு பேட்டியில் பகிர்ந்த போது சில அதிர்ச்சிகரமான தகவலை கூறியிருந்தார்,

நடிகை காயத்ரியின் முகம் பார்ப்பதற்கு சற்று ஆண் முகம் போல இருக்கும் இதனால் பலரும் இவரை திருநங்கை என்று நினைத்துள்ளனர். திருநங்கை என்றாலே விலை மாதர்களாக இருப்பார்கள் என்கிற ஒரு மனப்போக்கு மக்களிடையே உண்டு.

இந்த நிலையில் இவர் ஏதாவது ஒரு விழா நடந்தால் அதற்காக ஹோட்டல் அல்லது லாட்ஜுக்கு செல்வார். அப்படி அவர் செல்லும் பொழுது பலரும் இவரிடம் உன் விலை என்ன என்று நேரடியாகவே கேட்டுள்ளனர். இப்படி ஒரு விழாவிற்கு சென்றிருந்த பொழுது இவரை குடிகாரர் ஒருவர் பின்னாலேயே பின் தொடர்ந்து வந்து இருக்கிறார்.

அவரிடம் நீங்கள் நினைக்கும் ஆள் நான் இல்லை நான் லயோலா கல்லூரியில் படிக்கும் மாணவி என்று கூறியும் கூட அவர் தொடர்ந்து பின்பற்றி உள்ளார். இதனால் பயந்த காயத்ரி ஒரு நிலையில் அழத் துவங்கி விட்டார் பிறகு அங்கிருந்த ஒருவர் வந்து அந்த குடிகாரரை விரட்டி இருக்கிறார். இப்படி தன் வாழ்நாளில் அதிக கஷ்டங்களை அனுபவித்ததாக காயத்ரி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

To Top