Connect with us

2 லட்சத்தில் இருந்து இப்ப 3 கோடில வந்து நிக்குது!.. சந்தானம் சம்பளம் குறித்து விவரம் கொடுத்த தயாரிப்பாளர்!..

News

2 லட்சத்தில் இருந்து இப்ப 3 கோடில வந்து நிக்குது!.. சந்தானம் சம்பளம் குறித்து விவரம் கொடுத்த தயாரிப்பாளர்!..

Social Media Bar

Actor santhanam salary : சின்ன திரையில் காமெடியனாக இருந்து மிகவும் கஷ்டப்பட்டு தமிழ் சினிமாவிற்குள் காமெடியனாக வந்தவர் நடிகர் சந்தானம். காலத்திற்கு ஏற்றாற் போல தன்னுடைய காமெடி செய்யும் விதத்தையும் மாற்றி அமைத்து தற்சமயம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாகி உள்ளார்.

முதன் முதலாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் தமிழ் சினிமா திரைப்படங்களை கிண்டல் செய்து நடித்து வந்தார் சந்தானம். அதன் மூலம்தான் இவர் சினிமாவில் நடிகரானார். ஆரம்பத்தில் காமெடியனாக நடித்த சந்தானம் பிறகு ஹீரோவாக நடிக்க துவங்கினார்.

காமெடி கதாநாயகனாக நடித்து வந்த இவர் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் தன்னை ஒரு கமர்ஷியல் நாயகனாக மாற்றினார். தற்சமயம் 80ஸ் பில்டப் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றது.

இந்த படம் குறித்து படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா பேசும்போது “நான் எனது முதல் படமான சில்லுன்னு ஒரு காதல் படத்தை தயாரிக்கும்போது அதில் சந்தானம் காமெடியனாக சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த சமயத்தில் துவங்கி தொடர்ந்து என்னுடன் அவர் பயணித்து வருகிறார்.

அந்த படத்தில் அவருக்கு சம்பளமாக 1.45 லட்சம் சம்பளம் கொடுத்தேன். ஆனால் இப்போது 80ஸ் பில்டப் திரைப்படத்திற்கு அவருக்கு சம்பளமாக 3 கோடி ரூபாய் கொடுத்துள்ளேன். இன்னும் நான் அவருக்கு 30 கோடி சம்பளமாக கொடுக்கும் அளவிற்கு அவர் வளரவேண்டும் என்பதே என் ஆசை என கூறியுள்ளார் ஞானவேல் ராஜா.

Articles

parle g
madampatty rangaraj
To Top