Connect with us

நடிகைக்கு வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் கைது!

News

நடிகைக்கு வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் கைது!

Social Media Bar

கேரளாவில் பிரபல தொழிலதிபரும், சினிமா தயாரிப்பாளருமாக இருப்பவர் மார்ட்டின் செபாஸ்டின். இவர் மலையாளத்தில் சில படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் திருச்சூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இவர் மீது புகார் அளித்திருந்தார்.

மார்ட்டின் தனக்கு சினிமாவில் வாய்ப்புகள் வாங்கு தருவதாக கூறி பாலியல் ரீதியாக தவறாக நடந்துக்கொண்டதாக அந்த பெண் குற்றச்சாட்டு வைத்தார். தனக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி மும்பை பெங்களூரு போன்ற இடங்களுக்கு அழைத்து சென்றார்.

அழைத்து சென்ற இடங்களில் எல்லாம் தன்னை கற்பழித்தார் என அந்த பெண் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவங்கள் அனைத்தும் 2000 ஆம் ஆண்டில் நடந்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் மார்ட்டின் செபாஸ்டியன் இந்த கருத்துக்களை மறுத்து வந்தார்.

இதனை தொடர்ந்து அவர் மீது விசாரணைக்கு ஆணையிடப்பட்டது. 72 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பிறகு போலீசார் அவரை கைது செய்துள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்வு திரைத்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

To Top