Tamil Trailer
தொட கூடாத எடத்தில் எல்லாம் கை படுது.. ஓவர் லோட் காட்டிய பிக்பாஸ் ரச்சிதா.. வைரலாகும் ப்ரோமோ.!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலமாக அதிக பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா. சரவணன் மீனாட்சி தொடர் பிரபலமடைந்த பிறகு அதில் பல நடிகர் நடிகைகள் சரவணன் மற்றும் மீனாட்சியாக நடித்தனர். அப்படியாக ஒரு சமயத்தில் தங்க மீனாட்சியாக நடித்தார் ரச்சிதா.
அதற்கு பிறகு விஜய் டிவியில் அவருக்கு நிறைய சீரியல்களில் வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து பிக்பாஸிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் மூலம் அதிக பிரபலமடைந்தார் ரச்சிதா. அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் அதிகமாக கிடைக்க துவங்கின.
இந்த நிலையில் ஃபயர் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்தார் ரச்சிதா. இந்த திரைப்படத்தில் இவர் அதிக கவர்ச்சியாக நடித்திருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அதற்கு தகுந்தாற் போல ஏற்கனவே ப்ரோமோ ஒன்றும் வெளியாகி இருந்தது.
ஆனால் அந்த படத்தின் இயக்குனருக்கும் ரச்சிதாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து படத்தின் இயக்குனர் குறித்து பல்வேறு எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து வந்தார் ரச்சிதா.
இந்த நிலையில் தற்சமயம் படத்தின் இரண்டாம் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இது முதல் ப்ரோமோவை விடவும் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இதில் முழுக்க முழுக்க ரச்சிதாவுக்கு கவர்ச்சி காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.
மேலும் இந்த ப்ரோமோவில் ரச்சிதாவுக்கு படுக்கையறை காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளன. வெறும் கவர்ச்சியை மட்டுமே நம்பி இந்த படத்தை எடுத்துள்ளனர் என திட்டவட்டமாக தெரிகிறது.