சிவாஜி கணேசன் நடித்த காமெடி தங்க வேட்டை படம்! – ஆனால் வெளியாகவே இல்லையாம் ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் பிரச்சனை, சென்ஸாரில் பிரச்சனை என இந்த மாதிரியான பிரச்சனைகளால் வெளியாகாமல் போன திரைப்படங்கள் பல உள்ளன.

Social Media Bar

தமிழ் திரையுலகில் முக்கியமான ஆளான பஞ்சு அருணாச்சலத்திற்கும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போதெல்லாம் தொழிலதிபர்கள் ப்ரொடக்‌ஷன் நிறுவனம் மூலமாக படங்களை தயாரிப்பது வழக்கமாக இருந்தது.

இந்த நிலையில் பஞ்சு அருணாச்சலம் விளையாட்டாக சிவாஜி கணேசனிடம் ஒரு நகைச்சுவை தங்க புதையல் கதையை கூறியுள்ளார். அதை கேட்கும்போதே பலருக்கு நகைச்சுவையாக இருந்திருக்கிறது. எனவே இதை படமாக்கலாம் என திட்டமிட்டுள்ளனர். அதுதான் பஞ்சு அருணாச்சலம் சினிமாவிற்கு எழுதிய முதல் கதை.

இந்த படத்தை சேதுராமன் என்கிற தொழிலதிபர் ஜே.எல் பிலிம்ஸ் என்னும் நிறுவனம் மூலமாக படத்தை தயாரித்தனர். படத்தில் சிவாஜிகணேசன், ரவிசந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். பட வேலைகள் எல்லாம் முடிந்ததும் படத்திற்கான மொத்த உரிமையை எங்களுக்கு கொடுத்து விடுங்கள். பொறுப்பு எடுத்து தயாரித்ததற்கு உங்களுக்கு ஒரு தொகை தருகிறோம் என சேதுராமன் தரப்பினர் ஜே.எல் பிலிம்ஸிடம் பேசியுள்ளனர்.

ஆனால் ஜே.எம் பிலிம்ஸ் தரப்பினர் “பணம் எல்லாம் ஒன்றும் வேண்டும் ஆளுக்கு பாதி பங்கு பிரித்து கொள்ளலாம்” என பேசியுள்ளனர். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் இறுதி வரை அந்த படம் வெளியாகவில்லை. ஆனால் அந்த படம் வெளியாகி இருக்கும் பட்சத்தில் நல்ல ஹிட் கொடுத்திருக்கும் என கூறப்படுகிறது.