Connect with us

சார் என் படத்துல நடிக்கணும்னா அடி வாங்கி ஆகணும்! – நட்டியை பயமுறுத்திய ஹெச்.வினோத்

Cinema History

சார் என் படத்துல நடிக்கணும்னா அடி வாங்கி ஆகணும்! – நட்டியை பயமுறுத்திய ஹெச்.வினோத்

Social Media Bar

முதல் படத்தில் துவங்கி இதுவரை இயக்கிய அனைத்து படங்களிலும் ஹிட் கொடுத்தவர் இயக்குனர் ஹெச்.வினோத். ஆனால் இவருக்கு முதல் படம்தான் முக்கியமான படமாகும்.

சதுரங்க வேட்டை படத்தை ஹெச்.வினோத் இயக்கியபோது அந்த படத்திற்கு நடிக்க நடிகர்களே கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டார். சூர்யா மாதிரியான முன்னணி நடிகர்களில் துவங்கி சின்ன நடிகர்கள் வரையில் யாருமே இந்த படத்தில் நடிப்பதற்கு முன் வரவில்லை.

கதையின் கதாநாயகன் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரம் என்பதும், படத்தில் அடி வாங்கும் காட்சிகள் இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்த நிலையில்தான் நடராஜிடம் கதை கூறுவதற்கான வாய்ப்பு ஹெச்.வினோத்திற்கு கிடைத்தது.

ஹெச்.வினோத் நடராஜிடம் கதையை கூறும் முன்பே சார் இந்த கதையில் நீங்கள் அடி வாங்குவது போன்ற காட்சிகள் இருக்கும். அது உங்களுக்கு பரவாயில்லை என்றால் நான் கதையை கூறுகிறேன். ஏனெனில் இந்த காட்சிக்காக பலரும் இந்த கதையை நிராகரித்துவிட்டனர் என்றார் ஹெச்.வினோத்.

நிஜத்தில் அடி வாங்காதது வரை பிரச்சனை இல்லை என கூறியுள்ளார் நடராஜ். இதையடுத்து அவருக்கு ஹெச்.வினோத் கதையை கூற அது அவருக்கு மிகவும் பிடித்து போய் சதுரங்க வேட்டை திரைப்படம் உருவானது.

Articles

parle g
madampatty rangaraj
To Top