Connect with us

விஜய் ராஜபக்சே சந்திப்பு நடக்க போகுதா!.. அரசியல் வாழ்க்கைக்கு காத்திருக்கும் ஆப்பு!..

vijay rajabaksha

Latest News

விஜய் ராஜபக்சே சந்திப்பு நடக்க போகுதா!.. அரசியல் வாழ்க்கைக்கு காத்திருக்கும் ஆப்பு!..

cinepettai.com cinepettai.com

Vijay Political Entry: அரசியலில் காலை எடுத்து வைத்ததன் காரணமாக தினமும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது விஜய்யின் தமிழக வெற்றி கழகம். அந்த பெயரில் கூட சில சர்ச்சைகள் இருந்து வருகின்றன. தமிழகம் என்பது நம் மாநிலத்தின் பெயர் கிடையாது. இதை ஒரு தனி நாடு என்று மக்கள் அழைக்க வேண்டும் என்பதற்காகதான் அறிஞர் அண்ணா காலத்திலேயே தமிழ்நாடு என பெயரிடப்பட்டது.

ஆனால் ஒன்றிய அரசை சேர்ந்த சிலர் அந்த நாடு என்பதை நீக்கி தமிழகம் என அழைத்து வந்தனர். இந்த நிலையில் விஜய்யும் தமிழகம் என்ற சொல்லை பயன்படுத்தி இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நடுவே தீவிரமாக அரசியலுக்கு வர இருப்பதால் இனி திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என அறிவித்துள்ளார் விஜய்.

Vijay-Thalapathy
Vijay-Thalapathy

இது தற்சமயம் இருக்கும் அரசியல்வாதிகளுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது. மற்ற நடிகர்களை போல வெறுமனே அரசியல் கட்சியை துவங்கிவிட்டு பிறகு அரசியலில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருப்பார் என நினைத்த நிலையில் விஜய்யின் தீவிர அரசியல் நோட்டாவிற்கே டஃப் கொடுக்கும் சில கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு நடுவே நடிகர் விஜய் கோட் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். படப்பிடிப்புக்கு செல்லும் இடமெங்கும் ரசிகர்களுக்கு தரிசனம் தந்து வருகிறார் தளபதி. கோட் திரைப்படத்தில் இறுதி காட்சிகளை இலங்கையில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

Thalapathy-vijay
Thalapathy-vijay

இந்த நிலையில் இலங்கையின் முன்னாள் அதிபரான ராஜபக்சேவும் அவரது குடும்பத்தாரும் விஜய்யை சந்திக்க காத்திருக்கின்றனராம். இந்த சந்திப்பு மட்டும் நடந்துவிட்டால் அது விஜய்யின் அரசியல் வாழ்க்கையில் பெரும் பின்னடைவாக அமைந்துவிடும்.

எனவே கண்டிப்பாக விஜய் இதனால் இலங்கை படப்பிடிப்பை தவிர்த்துவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் இலங்கை படப்பிடிப்புக்கு சென்றுவிட்டால் அவரால் இந்த சந்திப்பை தடுக்க முடியாது.. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!.

POPULAR POSTS

varalaxmi sarathkumar
kavin harish kalyaan
shakila bailwan ranganathan
vishal
ar rahman ilayaraja
gabriella
To Top