எம்.ஜி.ஆராக சத்யராஜ்!.. கலைஞராக தம்பி ராமய்யா!.. கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு… சம்பவம் இருக்கு..

MGR and Karunanithi : தமிழ் சினிமாவை பொருத்தவரை அதில் ஒவ்வொரு துறையிலும் மிகச் சிறந்த ஜாம்பவான்களாக சிலர் இருந்திருக்கின்றனர். நடிப்பில் சிவாஜி கணேசன், பாடல் ஆசிரியர்களில் கண்ணதாசன், இசையமைப்பாளர்களில் எம் எஸ் வி.

இப்படி இருந்த காலகட்டங்களில் திரைக்கதை எழுதுவதில் மிகப்பெரும் திறமைசாலியாக இருந்தவர் கலைஞர் மு கருணாநிதி. தமிழ் சினிமாவின் திரைப்படப் போக்கையே மாற்றி அமைத்ததில் கருணாநிதிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

Social Media Bar

அதன் பிறகு அரசியலுக்கு சென்ற கருணாநிதி அதிலும் நிறைய பெயர்களை வாங்கி இருக்கிறார். இந்த நிலையில் கருணாநிதி பிறந்து 100 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் கலைஞர் நூற்றாண்டு விழா வருகிற ஆறாம் தேதி நடக்க இருக்கிறது.

இந்த விழாவில் கருணாநிதி இருந்த சமகாலத்தில் அவரிடம் எம்ஜிஆரும் சிவாஜி கணேசனும் திரைக்கதைக்காக போட்டி போட்ட சுவாரஸ்யமான சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன.

அவற்றை நாடகமாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த நாடகத்தில் கலைஞராக தம்பி ராமையாவும் எம்ஜிஆராக நடிகர் சத்யராஜ் சிவாஜி கணேசன் ஆக நடிகர் நாசரும் நடிக்கின்றனர். இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு இருந்து வருவதால் இணையத்தில் இந்த நாடகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.