கடைசி காலத்துலையும் கார் ஓட்டிக்கிட்டு கெத்தா இருந்த நடிகை!.. எஸ்.என் லெட்சுமியின் அறியாத பக்கங்கள்!..
தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து பெரும் ஹிட் கொடுக்க முடியும் என்பதை ஒரு முறை நிரூபித்து காட்டியவர் எஸ் என் லெட்சுமி.
எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டங்களில் சினிமாவிற்கு வந்தவர் எஸ்.என் லெட்சுமி. எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் விட குறைந்த வயது உடையவர் என்றாலும் கூட அவர்களுக்கே அம்மாவாக நடித்து இருக்கிறார். எஸ் என் லெட்சுமி ஒரு அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

அது தற்போதிருக்கும் இளம் கதாநாயகிகள் யாராலும் செய்ய முடியாத ஒரு விஷயமாகும். ஏனெனில் அந்த அளவிற்கு மனப்பக்குவம் இருந்தால்தான் ஒரு அம்மா கதாபாத்திரத்தை சரியாக நடிக்க முடியும். ஆனால் எஸ்.என்.லட்சுமி அதை மிக எளிதாகவே செய்யக்கூடியவராக இருந்தார்.
அவரின் நடிப்பின் திறனை கண்டு கமல்ஹாசன் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் எஸ் என் லட்சுமியை நடிக்க வைத்துக் கொண்டிருந்தார். மைக்கேல் மதன காமராஜன், விருமாண்டி போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் எஸ்.என் லட்சுமி நடித்திருப்பதை பார்க்க முடியும்.

எஸ்.என் லட்சுமி தன்னுடைய இறுதி காலம் வரை திருமணமே செய்து கொள்ளவில்லை என்பது பலரும் அறியாத விஷயமாகும் தன்னுடைய விலை உயர்ந்த காரை எப்போதும் அவரே தான் ஓட்டி செல்வார். அவர் இறக்கும் வரையிலும் கூட அந்த காரை ஓட்டுநர் வைக்காமல் அவரேதான் ஓட்டி சென்றாராம்.
படங்களில் பார்க்கும் பொழுது புடவை கட்டிக் கொண்டு கிராமத்து பெண் போல தோன்றினாலும் விலை உயர்ந்த காரை ஓட்டும் அளவிற்கு அனுபவம் கொண்டவர் லட்சுமி என்பதும் பலரும் அறியாத விஷயம். அதேபோல இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் கூட வருடா வருடம் சில ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்துள்ளாராம்.