Cinema History
ரஜினியின் அந்த மனசு யாருக்கும் வராது.. இது இவ்வளவு நாள் தெரியலையே..!
தமிழ் சினிமாவை பொறுத்தவரை இங்கு மார்க்கெட் என்பது படத்தின் வசூலை வைத்து தான் இருக்கிறது. அதிக வசூல் கொடுக்கும் நடிகர்கள் தொடர்ந்து அதிகமான சம்பளத்தை வாங்கி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக வசூல் நாயகனாக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனாலும் கூட நடிகர் ரஜினிகாந்த் எந்த காலத்திலும் தயாரிப்பாளரிடம் இவ்வளவு சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன் என்று கூறியதே கிடையாதாம்.
தொடர் தோல்வி படங்கள்:
அவரது மார்க்கெட்டை அறிந்து தயாரிப்பு நிறுவனங்களே அவருக்கு சம்பளத்தை வழங்குகின்றன என்று கூறப்படுகிறது. உதாரணத்திற்கு தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்த பொழுது அந்த படத்திற்காக அவர் 105 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினார்.
அதற்கு பிறகு அண்ணாத்த திரைப்படத்தில் நடித்த பொழுது 110 கோடி சம்பளமாக வாங்கினார். ஆனால் தர்பார், அண்ணாத்த இரண்டு திரைப்படங்களின் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனை தொடர்ந்து அடுத்து அவர் நடித்த ஜெயிலர் திரைப்படத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவருக்கு 80 கோடி ரூபாய் தான் சம்பளமாக கொடுத்தது.
அதாவது அவருடைய சம்பளத்தில் இருந்து கிட்டத்தட்ட 30 கோடி ரூபாயை குறைத்து அவருக்கு சம்பளமாக கொடுத்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இருந்தாலும் ரஜினிகாந்த் இது குறித்து எந்த கேள்வியும் எழுப்பாமல் அதை வாங்கிக் கொண்டார்.
ஏனெனில் இரண்டு படங்கள் ஏற்கனவே தோல்வி அடைந்துள்ளன என்பது ரஜினிகாந்துக்கே தெரிந்திருந்தது. ஆனால் ஜெயிலர் திரைப்படம் 600 கோடி தாண்டி பெரிய வெற்றியை கொடுத்தது. அதன்பிறகு அவருக்கு குறைத்துக் கொடுத்த 30 கோடியை திரும்ப பரிசாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிகாந்துக்கு கொடுத்தது.
சம்பளத்தை திரும்ப கொடுத்த ரஜினி:
இதே மாதிரிஆரம்ப காலகட்டங்களிலும் ரஜினிகாந்த் ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார். இயக்குனர் பாலச்சந்தரின் கவிதாலயா பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்து கொடுத்தார் ரஜினிகாந்த். அந்த படத்திற்காக கே பாலச்சந்தர் 13 லட்சம் சம்பளமாக கொடுத்தார்.
அதே சமயத்தில் ஏவிஎம் தயாரித்த ஒரு திரைப்படத்திலும் ரஜினிகாந்த் நடித்தார். அந்த படத்திற்காக ரஜினிகாந்த்க்கு 12.5 லட்சம் தான் சம்பளமாக கொடுத்தனர்.
அப்பொழுது அவரிடம் பேசிய ஏவிஎம் சரவணன் இது தான் உங்களது மார்க்கெட் எனவே இதற்கு அதிகமாக சம்பளம் கேட்காதீர்கள் என கூறியுள்ளார். இதனை அடுத்து கவிதாலயா பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு போன் செய்த ரஜினிகாந்த் அவருக்கு கொடுத்த சம்பளத்திலிருந்து 50000 திரும்ப கொடுத்துவிட்டு இதுதான் என்னுடைய மார்க்கெட் என்று கூறியிருக்கிறார்.
பஞ்சு அருணாச்சலம் செய்த உதவி:
இதேபோல பஞ்சு அருணாச்சலம் தயாரித்த பிரியா திரைப்படத்தில் நடிக்கும் போது மிக குறைவான சம்பளத்தை வாங்கிக் கொண்டு நடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.
அப்பொழுதுதான் பஞ்ச அருணாச்சலம் உன்னுடைய மார்க்கெட் அதிகம் அது தெரியாமல் இப்படி குறைவான சம்பளத்திற்கு நடிக்கிறாயே என்று ஒரு கோடி ரூபாயை சம்பளமாக கொடுத்திருக்கிறார்.
ரஜினிகாந்த் முதன்முதலாக ஒரு கோடி ரூபாய் சம்பளமாக வாங்கிக் கொண்டு நடித்த திரைப்படம் பிரியா. இப்படி தயாரிப்பாளர்கள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொண்டுதான் ரஜினிகாந்த் காலம் காலமாகவே நடித்திருக்கிறார்.
