கமல் படத்தில் போலீசாக இண்ட்ரோ கொடுத்த சிம்பு.. செக்க சிவந்த வானம் மாதிரியே இருக்கே!..

பத்து தல திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து சிம்பு நடித்து வரும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வருகிறார். மணிரத்தினம் இயக்கும் இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படம் துவங்கியப்போது இதில் முதலில் சிம்பு நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்படவில்லை. துல்கர் சல்மான், ஜெயம் ரவி போன்ற நடிகர்கள்தான் நடிக்க இருந்தனர். ஆனால் படப்பிடிப்பு துவங்கிய பிறகு ஆரம்பத்தில் இருந்த நடிகர்கள் எல்லாம் படத்தை விட்டு விலகினர்.

simbu
simbu
Social Media Bar

இதனை தொடர்ந்துதான் சிம்பு அந்த படத்தில் கமிட் ஆனார். இந்த நிலையில் தற்சமயம் சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. இந்த டீசரில் பார்க்கும்போது சிம்பு படத்தில் போலீஸ் கதாபாத்திரமாக வருகிறார் என தெரிகிறது. தக் எனப்படுபவர்கள் கொள்ளையடிப்பவர்கள்.

எனவே கமல்ஹாசன் கொள்ளையடிப்பவர்களின் தலைவராகவும் அவரை தேடும் போலீஸாக சிம்புவும் இருப்பார் என கூறப்படுகிறது. ஆனால் பார்ப்பதற்கு சிம்புவின் லுக் கிட்டத்தட்ட செக்க சிவந்த வானம் படத்தில் இருப்பது போலவே இருக்கிறது.