Cinema History
த்ரிஷாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய லவ் ப்ரோபஸ்! – மாஸ் காட்டிய நபர் யார் தெரியுமா?
நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாவார். வயதானாலும் சிங்கிளாவே இருப்போம் என தமிழ் சினிமாவில் திருமணமே செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகைகளில் த்ரிஷாவும் முக்கியமானவர்.

இதனால் இன்ஸ்டாவில் துவங்கி அனைத்து சமூக வலைத்தளங்களிலும் த்ரிஷாவிற்கு காதல் விருப்பம் தெரிவிக்கும் நபர்களை அதிகம் காணலாம். ஒவ்வொரு முறை த்ரிஷா புகைப்படம் வெளியிடும்போதும் அதில் காதல் விருப்பம் தெரிவிக்கும் நபரை காணலாம்.
இந்த நிலையில் த்ரிஷாவையே வியக்க வைக்கும் அளவில் லவ் ப்ரோபோஸ் செய்த ஒரு நபரை பற்றி அவர் தனது பேட்டியில் கூறியிருந்தார். வேறு யாரும் இல்லை. அதை செய்தது ஒரு 10 வயது சிறுவன்தான். அந்த 10 வயது சிறுவன் த்ரிஷாவிடம் தான் பள்ளியில் படித்து வருவதாகவும் படித்து பெரியவனான பிறகு அவரை திருமணம் செய்து கொள்வதாகவும், மேலும் இதுக்குறித்து தன் தாயிடம் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தான்”
மேலும் அதுவரை த்ரிஷாவை காத்திருக்குமாறு கூறியுள்ளான். இதை ஒரு பேட்டியில் த்ரிஷா மகிழ்ச்சியாக கூறியிருந்தார்.
