அவசரப்பட்டியே குமாரு!.. புல்லி கேங் ப்ளான் தெரியாமல் விசித்திராவிடம் வார்த்தையை விட்ட தினேஷ்!..
Trouble between Dinesh and Vichitra in Bigg Boss: பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக வந்த ஐந்து பேரில் தினேஷ் மற்றும் அர்ச்சனா சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதுவும் இரண்டே வாரத்தில் அர்ச்சனாவை போலவே தினேஷிற்கும் மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் போன வாரம் தினேஷ் கேப்டனாக நன்றாக செயல்பட்டார் என்று இந்த வாரமும் கேப்டன் பதவிக்கு தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் அவரே ஜெயித்த காரணத்தினால் இந்த வாரமும் தினேஷ்தான் கேப்டனாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் தோற்பவர்களுக்கு ஒரு வாரத்திற்கு சர்க்கரை கிடையாது என கூறப்பட்டது. இந்த நிலையில் விசித்திராவை சிக்க வைப்பதற்காக புல்லி கேங் ஒன்றிணைந்து விசித்திராவின் பெயரை ஒரு பாக்கெட்டில் எழுதி அதில் சர்க்கரையை ஒளித்து வைத்துள்ளனர்.

அதை அறியாத தினேஷ் அந்த பாக்கெட்டை விசித்திராதான் ஒளித்து வைத்தார் என நினைத்து அவரிடம் கடுமையாக பேசிவிட்டார். இதனையடுத்து தினேஷ் மன்னிப்பு கேட்டால்தான் சாப்பிடுவேன் என உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கிவிட்டார் விசித்திரா.
ஆனால் மற்றவர்கள் செய்த தவறுக்கு நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தினேஷும் பிடிவாதமாக இருந்து வருகிறார்.