News
விஜய்யை கட்டம் கட்டும் அரசியல் கட்சிகள்.. நெருப்புல விரல் வச்சா சுடும்னு காட்டிட்டாங்க?.. TVK மாநாட்டில் சம்பவம்..!
இந்த ஜனவரி மாதம் துவங்கியது முதலில் இருந்தே நடிகர் விஜய் கட்சி துவங்கிய விஷயம்தான் மக்கள் மத்தியில் அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து விஜய் தனது கட்சியின் பெயரையும் கொடியையும் அறிவித்தது முதலே அவர் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பது பலரது கேள்வியாக இருந்து வந்தது.
இந்த நிலையில் விஜய் தன்னுடைய அரசியல் களத்தில் முதல் விஷயமாக விக்கிரவாண்டியில் தற்சமயம் மாநில அளவிலான மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தார். இன்று மாலை இந்த மாநாடு துவங்க இருக்கிறது. இந்த நிலையில் அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் மாநாட்டிற்கு வர துவங்கி இருக்கின்றனர்.
எதிர்பார்த்ததை விடவும் அதிகமான கூட்டம் தற்சமயம் வருவதை பார்க்க முடிகிறது. மாநாடு துவங்குவதற்கு முன்பே விஜய் தனது ரசிகர்களுக்கு சில அறிவுரைகளை கூறியிருந்தார். கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் மாநாட்டிற்கு வர வேண்டாம்.
தமிழக வெற்றி கழக மாநாடு:
மாநாட்டிற்கு வரும் ரசிகர்கள் கூட இரு சக்கர வாகனங்களில் வரவேண்டாம் என்று கூறியிருந்தார். இருந்தாலும் சிலர் இரு சக்கர வாகனங்களில் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு நடுவே மாநாடு துவங்குவதற்கு முன்பே தொடர்ந்து விஜயின் மாநாடு குறித்து எதிர்மறையான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவ துவங்கியிருக்கின்றன.
மாநாடுக்கு வந்தவர்களில் சிலர் மயக்கம் போட்டு விழுந்ததாக கூறப்படுகிறது. அதே போல சென்னையில் இருந்து மாநாட்டுக்கு கிளம்பிய இளைஞர்கள் அங்கேயே விபத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலும் மாநாடுக்கு வந்த சிலர் தனியாக அமர்ந்து மது அருந்துவதாகவும் மாநாட்டில் சிகரெட் விநியோகம் செய்யப்படுவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
எதிர்மறையான செய்திகள்:
இப்படி தொடர்ந்து இந்த மாநாடு குறித்து எதிர்மறையான செய்திகள் மட்டுமே அனைத்து மீடியாக்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன இது சற்று உறுத்தலான விஷயமாக இருக்கிறது. மேலும் சாதாரணமாக ஹெல்மெட் அணியாமல் ரசிகர்கள் செல்வதை கூட ஆபத்தான முறையில் பயணம் செய்யும் விஜய் ரசிகர்கள் என பிம்பப்படுத்துகின்றனர்.
விஜய்யின் அரசியல் எண்ட்ரியை தடுக்கும் விதத்தில் அரசியல் கட்சிகள் திட்டமிட்டு இதை செய்கின்றனவா? என்று ஒரு பக்கம் விஜயின் ரசிகர்கள் கருத்து தெரிவிக்க துவங்கியிருக்கின்றனர். ஏனெனில் எந்த மாநாடு சரியாக நடத்தப்படவில்லை என்று அடையாளப்படுத்தப்பட்டு விட்டால் அது விஜய்யின் அரசியல் வாழ்க்கையில் பெரிய பின்னடைவாக இருக்கும். இதற்கு முன்பு மாநாடு நடந்த எந்த அரசியல் கட்சிகளும் இப்படி எதிர்மறையான விமர்சனங்களை அதிகமாக சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
