News
உங்க நாடகம் இனியும் மக்கள்கிட்ட பழிக்காது.. பரந்தூர் மக்களுக்காக களத்தில் விஜய்..!
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அவரது நடவடிக்கைகள் பலவும் அதிரடியாகதான் இருக்கின்றன. இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் வரக்கூடாது என போராடிவந்த மக்களுக்காக நேரில் சென்று குரல் கொடுத்துள்ளார் விஜய்.
அதில் அவர் பேசியது:
ராகுல் என்கிற சின்ன பையன் உங்க பிரச்சனை பத்தி பேசுனது என் மனசை ஏதோ செஞ்சுட்டு.. கிட்டத்தட்ட 960 நாட்களா உங்க மண்ணுக்காக போராடிகிட்டு இருக்கீங்க. ஒரு வீட்டு பெரியவங்க எவ்வளவு முக்கியமோ அதே போல ஒரு நாட்டுக்கு விவசாயிகள் ரொம்ப முக்கியம்.
அதுனால உங்க காலை தொட்டு என் அரசியல் பயணத்தை துவங்க நினைச்சேன். அதுக்கு இது ஒரு சரியான வாய்ப்பா அமைஞ்சுட்டுது. இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் சட்ட போராட்டம் நடத்துவேன்னு ஏற்கனவே சொல்லி இருந்தேன்.
இந்த போராட்டதுல நான் உங்களுக்கு ஆதரவா இருப்பேன். என்னை வளர்ச்சிக்கு எதிரானவன்னு பல பேர் சொல்லலாம். ஆனால் நான் ஏர்போர்ட் வருவதை தப்புன்னு சொல்லலை. ஆனால் விவசாயம் பண்ணாத பூமில அதை கொண்டு வாங்கன்னுதான் சொல்றேன்.
நீர் நிலைகளையும், விவசாய நிலங்களையும் அழிச்சி ஏர்போர்ட் கொண்டு வர்ற நினைக்கிற இந்த அரசு மக்கள் விரோத அரசாகதானே இருக்க முடியும். இவ்வளவு போராட்டத்துக்கு பிறகும் இங்க விமான நிலையம் வரணும்னு விடாப்பிடியா இருக்காங்கன்னா விமான நிலையம் தாண்டி அவங்களுக்கு வேற ஏதோ லாபம் இருக்குன்னுதான் அர்த்தம்.
நான் உங்கக்கிட்ட பேச ஊருக்குள்ள வர்றதுக்கு அனுமதி கேட்டப்ப எனக்கு அனுமதி கிடைக்கல. இங்க உங்களை பார்த்து பேசதான் அனுமதி கிடைச்சது. என் ஆதரவு எப்போதும் உங்க பக்கம்தான் என உணர்ச்சிகரகமாக பேசினார் விஜய்.