Connect with us

இத்தனை படங்களா! – இந்த வாரம் வெளியாகவிருக்கும் தமிழ் திரைப்படங்கள்!

News

இத்தனை படங்களா! – இந்த வாரம் வெளியாகவிருக்கும் தமிழ் திரைப்படங்கள்!

Social Media Bar

பிப்ரவரி 03 ஆம் தேதி தமிழ் ரசிகர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏறகனவே பிப்ரவரி 3 அன்று தளபதி 67 இன் க்லிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை இல்லாமல் ஏகப்பட்ட தமிழ் திரைப்படங்கள் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளிவர இருக்கின்றன. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இரண்டு படங்கள் வருகின்றன.

இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் தயாரான நான் கடவுள் இல்லை என்கிற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக சமுத்திரகனி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஷாக்சி அகர்வால் நடிக்கிறார்.

தலைக்கூத்தல் என்கிற திரைப்படமும் பிப்ரவரி 03 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.

த க்ரேட் இந்தியன் கிச்சன் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்த படமும் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி வருகிறது. சமையல் கட்டில் பெண்கள் படும் பாடுகளை பேசும் படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் ரன் பேபி ரன் என்கிற க்ரைம் த்ரில்லர் திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

அடுத்து யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் பொம்மை நாயகி திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இது இல்லாமல் தற்சமயம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் மைக்கேல் திரைப்படமும் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

To Top