News
யாஷிகா ஆனந்தின் சரக்கு பாடலுக்கு வைரமுத்து போட்ட பதிவு!.. நாட்டுக்கு அவசியமான பதிவு!..
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலேயே மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பொதுவாகவே இவர் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாகதான் அறியப்படுகிறார். பொதுவாகவே தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கால் ஊன்றும் நடிகைகளுக்கு அதிக நாட்கள் மார்க்கெட் இருந்தது கிடையாது.
இங்கு கவர்ச்சியை விடவும் நடிப்புக்கே அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இந்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்தும் சினிமாவில் வாய்ப்பை இழந்தார். இந்த நிலையில் அரிதாகவே அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் தற்சமயம் படிக்காத பக்கங்கள் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார் யாஷிகா ஆனந்த். இந்த படம் ஒரு காமெடி திரைப்படம் என கூறப்படுகிறது. இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக பிரஜின் நடித்துள்ளார்.
இதில் மதுவுக்கு எதிராக பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் அந்த பாடல் வெளியான நிலையில் அந்த பாடல் மதுவுக்கு எதிராக எழுதியது என்பதை உணர்த்தும் வகையில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.
”மரணத்திற்கு முன்பே
மனிதனைப் புதைத்துவிடுகிறது
மது
ஒவ்வொரு மணி நேரத்திற்கும்
16 மதுச் சாவுகள் நிகழ்கின்றன
44 முதல் 67 விழுக்காடு
சாலை விபத்துகள்
மதுவால் நேர்கின்றன
20மில்லி ரத்தத்தில் கலந்தாலே
பார்வையைப் பாதிக்கிறது மது
30மில்லி கலந்தால்
தசை தன் கட்டுப்பாட்டை
இழந்துவிடுகிறது
ஒருநாட்டின் மனிதவளம்
தவணைமுறையில் சாகிறது
ஒழுக்கக்கோடுகள் அழிந்து
ஒழுக்கக்கேடுகள் நுழைகின்றன வாழ்வியலில்
மதுவுக்கு எதிராக
நான் எழுதிய ஒருபாடலை
இன்று மாலை வெளியிடுகிறோம்
இப்போதே உங்கள்
கண்களுக்கும் காதுகளுக்கும்” என்பதே அந்த கவிதையாகும்
