Actress
சீரியல் நடிகைனா சும்மாவா.. கருப்பு உடையில் கலக்கி எடுக்கும் வாணி போஜன்!..
சீரியல் நடிகைகள் சினிமாவில் கதாநாயகி ஆவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. அதற்காக அவர்கள் நிறைவே போராட வேண்டியிருக்கிறது. தமிழ் சினிமாவில் அப்படி பல போராட்டங்களை கண்டு தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டவர் நடிகை வாணி போஜன்.
பெரும்பாலும் வாணி போஜன் நடிக்கும் திரைப்படங்களில் அவருக்கு துணை கதாபாத்திரங்கள்தான் கிடைக்கும். ஏனென்றால் சீரியலில் இருந்து சினிமாவுக்கு வரும் நடிகைகளுக்கு எடுத்த உடனே கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைப்பது கிடையாது.

வாரிசு நடிகைகளுக்கு கிடைக்கும் வாய்ப்பு:
அதே சமயம் அவர்கள் சினிமாவில் பிரபலங்களின் மகள்களாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு உடனே கதாநாயகியாக வாய்ப்பு கிடைப்பதை பார்க்க முடியும். உதாரணத்திற்கு அதிதி ஷங்கர், வரலட்சுமி சரத்குமார், சுருதிஹாசன் போன்ற நடிகைகள் எல்லாம் சினிமாவில் அறிமுகமாகும் போது கதாநாயகியாக நடித்தவர்கள்தான்.

ஆனால் வாணி போஜன் போன்ற நடிகைகள் பல காலங்களாக சினிமாவில் நடித்து வந்தோம் அவருக்கு இப்போதும் முக்கிய கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் ஓ மை கடவுளே திரைப்படம் வாணி போஜனுக்கு முக்கியமான படமாக அமைந்தது.

சீரியல் நடிகை:
அதற்கு முன்பு நிறைய சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜன் தெய்வமகள் என்கிற சன் டிவி சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தார். அதற்கு பிறகு லட்சுமி வந்தாச்சு போன்ற ஒரு சில சீரியல்களில் நடித்த பிறகுதான் அவருக்கு திரை துறையில் வாய்ப்பு கிடைத்தது.

தற்சமயம் திரைத்துறையை விட டிவி சீரியஸ்களில் இவருக்கு வாய்ப்பு அதிகமாக கிடைத்து வருகிறது. ஏற்கனவே ஜெய் நடித்த ட்ரிபிள்ஸ் என்கிற சீரிஸில் கதாநாயகியாக நடித்திருந்தார் வாணி போஜன். தொடர்ந்து அவருக்கு கதாநாயகியாக வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில் சீரியல் நடிகராக இருந்தாலும் கதாநாயகி அளவிற்கு தனக்கும் தகுதி இருக்கிறது என்பதை வழிப்படுத்தும் வகையில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள்தான் சமீபத்தில் அதிக வைரல் ஆகி வருகிறது.
