ஒரு நாள் கூட ஆகல இவ்ளோ வீவ்ஸா – வரவேற்பை பெரும் வாரிசு பாடல்
தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வாரிசு. 250 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது.
வாரிசு திரைப்படம் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட திரைப்படமாகும். எனவேதான் படத்தில் கதாநாயகி, இயக்குனர், தயாரிப்பாளர், அனைவரும் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர்களாக இருந்தனர்.
சரத்குமார், ஷியாம், விஜய் என ஒரு சிலரே இதில் தமிழ் சினிமாவில் இருந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் வருகிற 10 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வாரிசு திரைப்படம் வெளியாக இருக்கிறது.
அதே போல துணிவு திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. எனவே இரு பட குழுவும் தங்கள் படத்தின் வீடியோ பாடல்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று வாரிசு படத்தின் ஜிமிக்கி பொண்ணு என்கிற பாடல் வெளியாகியுள்ளது.
இந்த பாடலில் அதிக கவர்ச்சியில் தோன்றியுள்ளார் ராஷ்மிகா, விஜய்யை விட ரசிகர்கள் ராஷ்மிகாவை அதிகமாக ரசிக்கிறார்கள் என கூறப்படுகிறது. இந்த பாடல் 33 லட்சம் வீவ்களை கடந்து தற்சமயம் யூ ட்யூப்பில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.