Hollywood Cinema news
அந்த ஹாலிவுட் படத்தோட ரீமேக்தான் தளபதி 68.. அப்படினா கடைசில விஜய் செத்துருவாரா?
Thalapathy 68 : இயக்குனர்கள் அதிகமான படங்களை இயக்கியிருந்தாலும் கூட அவர்களுக்கு பெயரை சொல்லும் படமாக சில படங்கள் இருக்கும். அப்படியாக இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு மங்காத்தா திரைப்படம் இருந்தது. மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு ஒரு வரவேற்பை ஏற்படுத்தும் திரைப்படமாக இருந்த படம் மாநாடு.
மாநாடு திரைப்படம் கொடுத்த வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த படத்தின் கதை. தமிழில் வந்த முதல் டைம் லூப் கதை என்பதை தாண்டி அதை காட்சி படுத்திய விதத்தை சிறப்பாக செய்திருந்தார் வெங்கட் பிரபு. குறிப்பிட்ட காலக்கட்டம் திரும்பி திரும்பி ஒருவருக்கு நடந்து கொண்டிருப்பதைதான் டைம் லூப் என கூறுவார்கள்.
இந்த நிலையில் அடுத்து விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 திரைப்படமும் காலப்பயணம் தொடர்பான திரைப்படம் என்கிற பேச்சு இருந்து வருகிறது. முக்கியமாக ஹாலிவுட்டில் வெளியான லூப்பர் என்கிற திரைப்படத்தின் ரீமேக்தான் தளபதி 68 என கூறப்படுகிறது.
லூப்பர் படத்தின் கதைப்படி வில்லன் ஒருவனை கொல்வதற்காக படத்தின் கதாநாயகன் எதிர்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்கு செல்கிறான். கடந்த காலத்தில் வில்லன் ஒரு சிறு வயதாக இருக்கும்போதே அவனை கொல்ல வேண்டும். அதற்காக கதாநாயகன் கடந்த காலத்திற்கு செல்லும்போது நிகழும் சம்பவங்களே லூப்பர் படத்தின் கதையாகும்.
இந்த கதையை தமிழில் விஜய்யை கதாநாயகனாக வைத்து எடுக்கலாம் என முடிவெடுத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. ஆனால் இதில் இறுதியில் கதாநாயகன் இறப்பது போல படம் எடுக்கப்பட்டிருக்கும். வெங்கட் பிரபுவும் அப்படியே எடுப்பாரா அல்லது கதையை மாற்றி எடுப்பாரா என்பதே தற்சமயம் ரசிகர்கள் மத்தியில் விவாதமாக உள்ளது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்