Connect with us

அந்த ஒரு வரிதான் நான் சினிமாவிற்கு வருவதற்கு காரணம்! – வெண்ணிற ஆடை மூர்த்தி சினிமாவில் வாய்ப்பு பெற்ற கதை..!

Cinema History

அந்த ஒரு வரிதான் நான் சினிமாவிற்கு வருவதற்கு காரணம்! – வெண்ணிற ஆடை மூர்த்தி சினிமாவில் வாய்ப்பு பெற்ற கதை..!

Social Media Bar

தமிழில் பழம் பெரும் இயக்குனர்களில் முக்கியமானவர் ஸ்ரீதர். இவர் தமிழில் பல ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அவர் இயக்கி வெளியான காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்கள் இப்போதும் கூட தமிழில் வெகுவாக பேசப்படும் திரைப்படங்களாக இருந்து வருகின்றன.

தமிழில் முதன் முதலில் கல்யாண பரிசு திரைப்படம் மூலமாக ஸ்ரீதர் அறிமுகமானார். அவர் இயக்கிய திரைப்படங்களில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிற ஆடை முக்கியமான திரைப்படமாகும். வெண்ணிற ஆடை தமிழ் சினிமாவிற்கு இரண்டு முகங்களை அறிமுகம் செய்தது.

அதில் ஒன்று நடிகை ஜெயலலிதா, மற்றொன்று வெண்ணிற ஆடை மூர்த்தி. தனது முகபாவனையிலேயே நகைச்சுவை செய்யும் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு முதல் வாய்ப்பாக இந்த படம் அமைந்தது. இந்த படம் இயக்கிய காலக்கட்டத்தில் அவர் கல்லூரியில் படித்து வந்தார்.

கல்லூரியில் நடக்கும் நாடகங்களில் நகைச்சுவை கதாபாத்திரமாக நடித்து வந்தார். அந்த ஆர்வமே அடுத்து சினிமாவிலும் நகைச்சுவையாளராக வர காரணமாக அமைந்தது. இந்த நிலையில் வெண்ணிற ஆடை திரைப்படத்திற்கு வாய்ப்பு தேடி இயக்குனர் ஸ்ரீதரை சந்திக்க சென்றார் மூர்த்தி.

ஸ்ரீதரை சந்தித்ததும் அவரிடம் காமெடியனாக நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டார். ஆனால் அவரை பார்த்த ஸ்ரீதர், உங்களை பார்த்தா காமெடியன் ஃபீலிங்கே வர மாட்டேங்குதே. பேசாம ஹீரோவா நடிங்களேன் என கூறியுள்ளார். இல்ல சார் காமெடி எனக்கு நல்லா வரும், சான்ஸ் கொடுத்தா நல்லா பண்ணுவேன் என வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியுள்ளார்.

சரி பார்ப்போம் என ஸ்ரீதர் கூற அப்போது கிளம்பிய மூர்த்தி ஸ்ரீதரிடம் ஒரு வார்த்தை கூறினார். சார் எல்லோருக்கும் அவங்க முகம்தான் அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. ஆனா எனக்கு என் முகமே துர்திருஷ்டமா போச்சு என்றார். இதை கேட்டதும் இயக்குனர் ஸ்ரீதருக்கு மன உளைச்சலாக போய்விட்டது. உடனே அழைத்து வெண்ணிற ஆடை படத்தில் வாய்ப்பை கொடுத்தார். இப்படி ஒரு வார்த்தை மூலம் வாய்ப்பை பெற்றார் வெண்ணிற ஆடை மூர்த்தி.

To Top