ஒரு பொண்ணுக்கு பீரியட்ஸ் வர்றதை கூட கலாய்ப்பீங்களா!.. வாயை விட்டு ரசிகர்களிடம் சிக்கிய விச்சித்திரா…

Vichitra and Archana : பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்கியது முதலே இருந்த பெரும் ஆதரவுகளை கடந்த இரு வாரங்களாக இழந்து வருகிறார் நடிகை விசித்ரா. நடிகை விசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தது முதல் ஒரு வலிமையான போட்டியாளராக இருந்து வருகிறார்.

அவரது பேச்சுக்களும் கோபமும் மக்களுக்கு அவர் மீது ஆதரவை தான் ஏற்படுத்தியதை தவிர கோபத்தை ஏற்படுத்தவில்லை. அதிலும் முக்கியமாக அர்ச்சனாவை பலரும் சேர்ந்து கேலி செய்தபொழுது அர்ச்சனாவிற்கு ஆதரவாக விசித்ரா நின்றபொழுது  அவருக்கான ஆதரவும் மக்கள் மத்தியில் அதிகரித்தது.

vichitra
vichitra
Social Media Bar

ஆனால் கடந்த இரு வாரங்களாக நிறைய மோசமான விஷயங்களை அவர் செய்து வருவதாக பிக் பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதிலும் முக்கியமாக நேற்று நடந்த டாஸ்க்கில் மிக மோசமான சில விஷயங்களை பேசி இருக்கிறார் விசித்ரா.

யாரெல்லாம் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க தகுதியற்றவர்கள் என்று அவர்களை குறித்த நியாயமான குறையை கூறி அவர்களை வட்டத்திலிருந்து வெளியே அனுப்ப வேண்டும் என்பது டாஸ்காக இருந்தது. அதில் விசித்ரா பேசும் பொழுது அர்ச்சனா தனக்கு மாதவிடாய் பிரச்சனையால் வயிற்று வலி வருவதை கேமரா முன்பு சொன்னார் என்று அதைக் கேலியாக கூறி இருக்கிறார் விசித்ரா.

இந்த விஷயத்தில் கேலி செய்வதற்கு என்ன இருக்கிறது சுய அறிவோடு தான் பேசுகிறீர்களா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் அர்ச்சனா. அர்ச்சனாவுக்கு ஆதரவாக ரவீனாவும் கேள்வியை எழுப்பியுள்ளார். இந்த நிலையில் இந்த விஷயத்தில் ரசிகர்களுக்கு விசித்ரா மீது அதிருப்தி ஏற்பட்டு உள்ளது எனவே அவர்கள் இது குறித்து அவரை விமர்சித்து வருகின்றனர்.