Tamil Cinema News
அபராதம் போட்ட தயாரிப்பு நிறுவனம்..! ஆடிப்போன லைக்கா.. அஜித் படத்துக்கு வந்த தலைவலி.
சினிமாவை பொறுத்தவரை அதில் சில நேர்மையான விஷயங்களை எப்பொழுதும் இயக்குனர்கள் கையாள வேண்டி இருக்கிறது. எப்படி ரசிகர்கள் திருட்டு விசிடி மூலமாக திரைப்படங்களை பார்ப்பது தவறோ அதே மாதிரி ஒரு திரைப்படத்தை திருடி படமாக்குவது அதைவிட ஆயிரம் மடங்கு தவறான விஷயமாகும்.
ஆனாலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து இந்த விஷயங்கள் நடந்து வருகிறது இயக்குனர் அட்லி மாதிரியான சில இயக்குனர்கள் சிறு படங்களில் வரும் காட்சிகளை தேடி படமாக்குவதாக ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதுமே ஒரு குற்றச்சாட்டு உண்டு.
அந்த வகையில் சில இயக்குனர்கள் இதே மாதிரி காப்பி அடித்து படமாக்குவதை பழக்கமாக கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஹாலிவுட்டில் வெளியான பிரேக் டவுன் என்கிற திரைப்படத்தின் தழுவலாக அதே கதையைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம்.
லைக்கா நிறுவனத்திற்கு பிரச்சனை:
இந்த திரைப்படம் சில நாட்களில் திரைக்கு வர இருக்கிறது. வருகிற பொங்கல் அன்று இது திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரேக் டவுன் திரைப்படத்தின் தழுவல் என கூறப்பட்டது.
ஆனால் ப்ரேக் டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பாராமௌண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இதுகுறித்து எந்த ஒரு உரிமமும் பெறாமல் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தி பாராமௌண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் காதுக்கு செல்லவே அவர்கள் தற்சமயம் விடாமுயற்சி படத்திற்காக 150 கோடி நஷ்ட ஈடு தொகை கேட்டு வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே தற்சமயம் இதுக்குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இது விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதில் தற்சமயம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்