Connect with us

இன்ப சுற்றுலா சென்ற நயன் தாரா!.. விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் பிரச்சனைதான்..!

nayanthara vignesh shivan

Latest News

இன்ப சுற்றுலா சென்ற நயன் தாரா!.. விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் பிரச்சனைதான்..!

Social Media Bar

தொடர்ந்து நடிகை நயன்தாரா மீது சினிமா துறையில் சில குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இவர் தமிழில் மிகப்பெரும் டாப் நடிகையாக இருந்தாலும் கூட தன்னுடைய திரைப்படங்கள் வசூல் குறைவாக இருக்கும்பொழுது அடுத்த திரைப்படத்தில் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ள மாட்டார் என்பது காலங்களாக இருந்து வரும் குற்றச்சாட்டுகளாக இருக்கின்றது.

உதாரணத்திற்கு சமீபத்தில் நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படம் திரையரங்கில் படுதோல்வி அடைந்தது. ஆனால் அந்த திரைப்படத்திற்காக அவர் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் திரைப்படம் ஒட்டுமொத்தமாகவே ஒரு கோடி ரூபாய் கூட வசூல் செய்யவில்லை.

தோல்வியை கண்ட நயன்:

பாலிவுட்டில் கங்கனா ரனாவத்திற்கு கிடைக்கும் அதே தோல்வி நயன்தாராவிற்கும் தமிழ் சினிமாவில் கிடைத்திருந்தது. அப்படியும் கூட அவர் தொடர்ந்து அடுத்த திரைப்படங்களில் அதிக சம்பளத்தைதான் பெற்று வருகிறார்.

இதற்கு நடுவே படப்பிடிப்பு தளங்களிலும் நிறைய பிரச்சனைகள் இவரால் நடப்பதாக பேசப்படுகிறது. விக்னேஷ் சிவனும் திரைப்படங்கள் இயக்குவதில் மிகுந்த கவனம் செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பேசிய அந்தணன் கூறும் பொழுது அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன்தான் இயக்குவதாக இருந்தது.

ஆனால் படத்தின் முதல் பாதிக்கான கதையை மட்டும்தான் அவர் கொடுக்கப்பட்ட காலத்தில் எழுதி இருந்தார். அது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியதை அடுத்ததாக விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனியை இயக்குனராக மாற்றினார்கள்.

படம் இயக்குவதில் பிரச்சனை:

இப்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.சி திரைப்படத்திலும் இதே பிரச்சனை தான். இந்த படத்திற்கான வேலையை பார்த்துக் கொண்டிருப்பதற்கு நடுவே தற்சமயம் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளனர் விக்னேஷ் நயன் ஜோடி.

இதனை தொடர்ந்து படத்தின் படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறார் விக்னேஷ் சிவன். அதனால் கண்டிப்பாக இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வராது என்று கூறுகிறார் அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top