News
விஜய் துப்பாக்கி கொடுத்தாரு… அஜித் சீக்ரெட் மெசேஜ் கொடுத்தாரு.. எஸ்.கேவுக்கு ரெண்டு பேரும் சப்போர்ட் போல?..
சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடித்து அதன் மூலமாக தற்சமயம் அதிக வரவேற்பு பெற்ற நடிகராக மாறி இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து வரவேற்புகள் அதிகரித்து வருகின்றன அடுத்த தலைமுறையினர் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நடிகராக சிவகார்த்திகேயன் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் ரஜினி விஜய் போலவே இவரும் சிறுவர்களுக்கு பிடித்த ஒரு நடிகராக இருந்து வருகிறார். இதற்கு நடுவே தமிழில் உள்ள பிரபலமான நடிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனை வளர்த்து விடுகின்றனர் என்று கூறலாம்.
விஜய் கோட் திரைப்படத்தில் கூட சிவகார்த்திகேயனுக்கு ஒரு காட்சி வைத்திருந்தார். சிவகார்த்திகேயனுக்கு முன்பிருந்தே விக்ரம் சூர்யா போன்ற நடிகர்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் இருந்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு:
அந்த அளவிற்கு சிவகார்த்திகேயனுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் விஜய் அவரை ஒரு காட்சியில் வைத்தது மட்டுமன்றி அடுத்து விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயன் தான் சினிமாவில் அந்த இடத்தை பிடிப்பார் என்பது போல அந்த காட்சியை அமைத்திருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து பேசிய சிவகார்த்திகேயன் கூறும் பொழுது விஜய் எனக்கு கையில் துப்பாக்கி கொடுத்தார். அஜித் என்னை நேரில் சந்தித்து என்னிடம் இனி நீ பெரும் வளர்ச்சியை அடைவாய் ஆனால் அது குறித்து நிறைய எதிர்மறையான பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும் அனைத்திற்கும் தயாராக இரு என்று அறிவுரை கூறினார் என்று இருவர் குறித்தும் பகிர்ந்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
