Cinema History
பெத்தவங்க புள்ளைங்களை புரிஞ்சுக்கிறது முக்கியம்!.. பேட்டியில் விளக்கிய விஜய் ஆண்டனி!..
தமிழ் சினிமாவிற்கு வந்த காலம் முதலே பிரபலமாக இருந்து வரும் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் விஜய் ஆண்டனி. அப்போது விஜய் ஆண்டனி போட்ட இசைக்கு தனி வரவேற்பு இருந்தது என்று கூறலாம். முதன்முதலாக சுக்கிரன் திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விஜய் ஆண்டனி.
அதற்குப் பிறகு அவர் இசையமைத்த இரண்டாவது திரைப்படம் டிஷ்யூம் இந்த திரைப்படத்தில் எல்லா பாடல்களுமே பயங்கர ஹிட் கொடுத்தது. அதற்குப் பிறகு நான் அவன் இல்லை, வேட்டைக்காரன் என்று தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்தார் விஜய் ஆண்டனி.
அதன்பிறகு நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட விஜய் ஆண்டனி தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். அவர் தனித்துவமான திரைக் கதைகளை தேர்ந்தெடுத்து படம் நடிப்பதால் அவரது திரைப்படத்திற்கு எப்போதுமே வரவேற்பு இருந்து வருகிறது.
தற்சமயம் அவரது மகளின் தற்கொலை காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தார் விஜய் ஆண்டனி. இதற்கு முன்பு ஒரு பேட்டியில் விஜய் ஆண்டனி பேசும்போது அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது தற்சமயம் உள்ள இளைஞர்கள் அவர்களது பெற்றோர் மீது அதிக பாசம் காட்டுகிறார்களா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி சாதாரணமாக 80 லிருந்து 90 சதவீத இளைஞர்களுக்கு தங்களது பெற்றோர்கள் மீது பாசம் உள்ளது. ஆனால் அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு பொருளாதார ரீதியான பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றை சரி செய்வதற்கே அவர்களுக்கு நாள் சரியாக இருப்பதால் தன்னுடைய பாசத்தை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்வதில்லை.
ஆனால் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தங்கள் மீது பாசம் இல்லை என்று நினைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளின் சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும். என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
விஜய் ஆண்டனியின் மகள் இறப்பின் பொழுது விஜய் ஆண்டனி குறித்து நிறைய அவதூறு பேசினார்கள். ஆனால் இப்படி ஒரு மனநிலை கொண்டவர் எப்படி தனது மகளைப் புரிந்து கொள்ளாமல் இருந்திருப்பார் என்று நெட்டிசன்கள் இந்த பேட்டியில் கமெண்ட் செய்துள்ளனர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்