News
விஜய் பாட்டை கொடுக்க முடியாதுன்னா 7 கோடி கம்மியாதாம் தருவோம்!.. சன் பிக்சர்ஸால் கோட் படத்துக்கு வந்த சோதனை!.
Vijay : லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பிரபுதேவா பிரசாந்த் மாதிரியான பல முக்கிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். இதனால் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பும் அதிகரித்து வருகிறது. தற்சமயம் திரைப்படங்களைப் பொறுத்தவரை அவற்றின் ஓ.டி.டி விற்பனை என்பது நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

அவற்றின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் நிறைய திரைப்படங்களை தற்சமயம் ஓடிடி நிறுவனங்கள் வாங்குவதை நிறுத்தி வைத்திருக்கின்றன. இருந்தாலும் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் விற்று கொண்டுதான் இருக்கின்றது.
ஒ.டி.டியில் பிரச்சனை:
அந்த வகையில் விஜய் நடித்த கோட் திரைப்படத்தின் உரிமத்தை வாங்குவதில் தற்சமயம் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. கோட் திரைப்படத்தின் ஆடியோ உரிமத்தை டி சீரிஸ் நிறுவனம்தான் வாங்கி இருக்கிறது. இதற்காக டி சிரிஸ் நிறுவனம் 24 கோடி ரூபாய் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் வெளியாகும் வீடியோ பாடல்கள் தங்களுடைய டீ சீரிஸ் youtube சேனலில் போட்டுக் கொள்ள முடியும். இதனால் நல்ல லாபம் கிடைக்கும் என நினைத்துதான் டீ சீரிஸ் இவ்வளவு பெரிய தொகையை ஆடியோ உரிமத்திற்கு கொடுத்திருக்கிறது.

ஆனால் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி வாங்கியிருக்கிறது சன் டிவி யை பொறுத்தவரை அவர்கள் தங்களது யூடியூப் சேனலில் கோட் திரைப்படத்தின் பாடல்களை வெளியிட வேண்டும் என்று கேட்டிருக்கின்றனர்.
எனவே ஏஜிஎஸ் நிறுவனம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அதற்கான உரிமையை கொடுத்திருக்கின்றனர். இதனால் கோபமான டீ சீரிஸ் நிறுவனம் வீடியோ பாடல்களை கொடுக்கவில்லை என்றால் 7 கோடி ரூபாய் குறைவாகத்தான் கொடுப்போம் என்று கூறி இருக்கின்றனர். ஆனால் ஆடியோ உரிமத்தை மட்டும் பெரும் நிறுவனத்திற்கு, வீடியோ பாடல்களை கேட்பதற்கு உரிமை கிடையாது என்பதால் இந்த பேச்சுவார்த்தை எப்படி சென்று முடியும் என தெரியவில்லை.
