News
கோட் படத்தில் வரும் பாம் சீன்.. லீக் செய்த ரசிகர்கள்.. அதிர்ச்சியில் பிரேம் ஜீ..!
வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி கோட் திரைப்படம் திரையரங்கிற்கு வர தயாராகி வருகிறது. நேற்றே படத்திற்கான புக்கிங் ஓபனாகிவிட்டது. அதனை தொடர்ந்து படத்திற்கான புக்கிங் எக்கச்சக்கமாக நடந்து கொண்டு இருக்கிறது.
சென்னை மாதிரியான பெருநகரங்களில் தொடர்ந்து புக்கிங் அதிகரித்து வருவதால் தற்சமயம் முதல் நாள் பட காட்சிகள் முக்கால்வாசி திரையரங்குகளில் ஏற்கனவே புக்கிங் ஆகி.விட்டன ஏ.ஜி.எஸ் நிறுவனம் எதிர்பார்த்ததை விடவும் கோட் திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகமாகவே கிடைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
கோட் திரைப்படம்:
இந்த நிலையில் வழக்கம் போல வெங்கட் பிரபுவின் அனைத்து திரைப்படங்களிலும் நடிப்பது போல நடிகர் பிரேம்ஜி இந்த திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் இரண்டு பாடல்களிலும் பணி புரிந்திருக்கிறார். பிரேம் ஜி. மேலும் முழு திரைப்படத்திலும் இளம் விஜய்க்கு மாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சினேகாவின் தம்பியாக இவருக்கு கதாபாத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது படத்தை பொருத்தவரை படத்தில் வயதான விஜய்யை நான் மாமா என்று அழைப்பேன். சின்ன விஜய் என்னை மாமா என்று அழைப்பார். ஏனெனில் நான் சினேகா கதாபாத்திரத்தின் தம்பியாக நடித்துள்ளேன்.
படத்தில் ஆக்ஷன் சீன்:
படத்தில் முழுக்க முழுக்க நான் வருவது கிடையாது ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருவேன். ஏனெனில் படம் முழுக்க விஜய், பிரசாந்த் மற்றும் பிரபுதேவா இவர்களுக்கு இடையே இருக்கும் நட்பை காட்டுவதாகதான் படம் இருக்கும்.
ஆனால் நான் வரும் காட்சிகள் எல்லாம் ஜாலியான காட்சிகளாக இருக்கும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ரசிகர்கள் படத்தின் ஒரு காட்சியை கண்டுபிடித்து விட்டதாக கூறி தொகுப்பாளர் ஒரு காட்சியை கூறினார் அதன்படி ஒரு காட்சியில் சி.எஸ்.கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இடையே கிரிக்கெட் நடந்து கொண்டிருக்கிறது.

அந்த சமயத்தில் அந்த மைதானத்தில் யாரோ பாம் வைத்து விடுகின்றனர் இப்பொழுது பிரேம்ஜியும் விஜய்யும் சேர்ந்து அந்த பாமை கண்டுபிடிக்கின்றனர் என்பதாக ஒரு காட்சி உள்ளதாக ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது உண்மையா என்று பிரேம்ஜியிடம் கேட்கப்பட்டது அதற்கு ஷாக்கான ப்ரேம்ஜி அவ்வளவு கண்டுப்பிடிச்சிட்டாங்களா? மொத்த படம் 3 மணி நேரம் அதில் ஒரு சில காட்சிகளை மட்டும் தானே கண்டுபிடித்திருக்கிறார்கள் பரவாயில்லை என்று கூறி இருக்கிறார். இதன் மூலம் அந்த படத்தில் இப்படியான காட்சி ஒன்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.
