Connect with us

15 வயசுலையே வற்புறுத்தி பண்ண வச்சாங்க.. எம்.ஜி.ஆரோடு இருந்த அக்ரிமெண்ட்… நடிகை லதா ஓப்பன் டாக்..!

MGR latha

Cinema History

15 வயசுலையே வற்புறுத்தி பண்ண வச்சாங்க.. எம்.ஜி.ஆரோடு இருந்த அக்ரிமெண்ட்… நடிகை லதா ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமா திரையுலகில் மறக்க முடியாத நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் எம்.ஜி.ஆர். அந்த சமயத்தில் நடிகர் எம்.ஜி.ஆருக்கு இருந்த அளவிற்கு ரசிகப்பட்டாளம் வேறு எந்த நடிகருக்குமே இல்லை என்று கூறலாம்.

அந்த அளவிற்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். அதை வைத்துதான் அரசியலில் களமிறங்கி தொடர்ந்து வெற்றியும் பெற்றார் எம்.ஜி.ஆர் இந்த நிலையில் எம்.ஜி.ஆர் பலருக்கும் நன்மைகள் செய்திருப்பதாக அப்போது முதல் இப்போது வரை பேச்சுக்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

நடிகர் எம்.ஜி.ஆர்:

அதே சமயம் பெண்கள் விஷயத்தில் தொடர்ந்து எம்.ஜி.ஆர் குறித்து நிறைய சர்ச்சைகளும் இருந்து வருகின்றன. முக்கியமாக எம்.ஜி.ஆர் அவருடன் நடிக்கும் நடிகைகளிடம் நெருக்கமாக நடிப்பது அதிக சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அவருடன் நடித்த நடிகை ஜெயலலிதாவுடன் அவர் தொடர்பில் இருந்தார் என்பது பரவலாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது.

இதனால் மற்ற நடிகைகளுடனும் அவர் அப்படி இருந்திருப்பாரோ என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் உண்டு. இன்னும் சிலர் கூறும் பொழுது நடிகை மஞ்சுளா, லதா மாதிரியான நடிகைகளுடன் எம்.ஜி.ஆருக்கு தொடர்பு இருந்ததாக கூறுகின்றனர்.

ஆனால் இதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. இந்த நிலையில் நடிகை லதாவிடமே இது குறித்து ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அப்பொழுது அதற்கு பதில் அளித்த லதா கூறும்பொழுது 15 வயதில் நான் சினிமாவிற்கு வருவதற்கு எனது பெற்றோர்கள் சுத்தமாக ஒப்புக்கொள்ளவே இல்லை.

15 வயதிலேயே எண்ட்ரி:

நான் சினிமாவிற்கு வரக்கூடாது என்று நினைத்தார்கள். ஆனால் அப்பொழுதே எம்.ஜி.ஆர்தான் வற்புறுத்தி என்னை சினிமாவிற்கு வர வைத்தார். அதன் பிறகுதான் எனக்கு சினிமாவில் ஒரு நல்ல எதிர்காலம் கிடைத்தது.

அதே போல எம்.ஜி.ஆர் வளர்த்துவிட்ட நடிகைகள் பலரும் வளர்ந்த பிறகு அவருக்கு வாய்ப்புகள் கொடுப்பதில்லை என்கிற நிகழ்வு நடந்து வந்தது. இதனால் எம்.ஜி.ஆர் என்னுடன் அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டார் அதன்படி ஐந்து வருடங்களுக்கு எம்.ஜி.ஆர் சொல்லும் படங்களில் மட்டும்தான் நான் நடிக்க முடியும்.

அதனாலேயே நான் தொடர்ந்து மற்ற நடிகர்கள் படங்களில் நடிக்க முடியாமல் போனது. அதனால் தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களிலேயே நான் நடித்து வந்தேன். அந்த அக்ரீமெண்ட் முடிந்த பிறகும் கூட நான் எந்த படங்களில் நடிக்க வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர்தான் முடிவு செய்தார் என்று கூறுகிறார் லதா.

அடுத்து ரஜினியை எம்.ஜி.ஆர் ராமாபுரம் தோட்டத்தில் வைத்து அடித்தார் என்கிற செய்தி குறித்து கேட்ட பொழுது அதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார் லதா.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
manimegalai vj vishal
To Top