News
ரெண்டு நாளா தியேட்டருக்கு ஒருத்தர் கூட வரலை! – டி.எஸ்.பி படத்துக்கு விழுந்த அடி!
நடிகர் விஜய் சேதுபதி என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். தற்சமயம் விஜய் சேதுபதி நடித்து பொன்ராம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் டி.எஸ்.பி.

இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் ஸ்னீக் பீக் எல்லாமே மிகவும் ஆவரெஜ் ரக கமெர்ஷியல் பட அளவிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. பெரிதாக ரசிகர்களுக்கு இவை எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் இந்த படம் கடந்த 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் எதிர்பார்த்த அளவில் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. லவ் டுடே படத்தின் அளவிற்கு கூட வெற்றியை தரவில்லையாம் டி.எஸ்.பி.
இந்த நிலையில் வெளியான முதல் நாளே அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் யாருமே திரையரங்கிற்கு வரவில்லையாம். ஒருத்தர் கூட வராத திரையரங்குகள் எல்லாம் இருந்துள்ளன. தமிழகத்திலும் கூட வெளியாகி மூன்று நாட்களே ஆன நிலையில் சென்னை போன்ற முக்கிய நகரங்களிலேயே எந்த ஒரு ஷோவும் அதிக புக்கிங் ஆகவில்லை.

எனவே டி.எஸ்.பி படம் விஜய் சேதுபதிக்கு படு தோல்வியான படம் என கூறப்படுகிறது. ஆனால் இரு தினங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி மற்றும் அவரது நண்பர்கள் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர். எனவே இந்த நிகழ்வு குறித்து விமர்சனம் எழுந்து வருகிறது.
