Connect with us

விஜய் சேதுபதியின் அடுத்த படம் அப்டேட் ! –  திகில் படமா இருக்குமோ!

Latest News

விஜய் சேதுபதியின் அடுத்த படம் அப்டேட் ! –  திகில் படமா இருக்குமோ!

cinepettai.com cinepettai.com

தமிழின் முக்கிய நட்சத்திரமான விஜய் சேதுபதி வரிசையாக திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார். தற்சமயம் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் விடுதலை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இயக்குனர் மிஸ்கின் இயக்கும் பிசாசு 2 திரைப்படத்திலும் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கலாம் என முடிவெடுத்திருந்தார் விஜய் சேதுபதி.

ஆனால் துணிவு படத்தின் படப்பிடிப்பை முடிக்கவே ஹெச்.வினோத்திற்கு அதிக காலம் தேவைப்பட்டதால் அடுத்த படத்தை வேறு இயக்குனருக்கு கொடுக்கலாம் என முடிவு செய்தார் விஜய் சேதுபதி அதன்படி இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி.

நித்திலன் சுவாமிநாதன் ஏற்கனவே குரங்கு பொம்மை என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது ஒரு த்ரில்லர் திரைப்படமாகும். எனவே அவர் அடுத்து விஜய் சேதுபதியை வைத்து இயக்குகிற திரைப்படமும் கூட த்ரில்லர் திரைப்படங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நட்டி நடராஜ், முனிஸ்காந்த் ஆகியோரும் நடிக்க உள்ளனர்.

POPULAR POSTS

lingusamy kamalhaasan
vishal rathnam
ks ravikumar vishal
vishal
prakash-raj-1
oru nodi poster
To Top