TV Shows
வி.ஜே பிரியங்காவுக்கு எதிராக கூடும் கூட்டம்.. மணிமேகலை அணியில் மக்கள் விரும்பும் முக்கிய கோமாளி..
கடந்த இரண்டு தினங்களாகவே மணிமேகலை குறித்த விஷயங்கள்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. சின்னத்திரை மூலமாக அதிகமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை.
ஆரம்பத்தில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக அதிகமாக பிரபலமானார். நிகழ்ச்சியில் என்னதான் கோமாளியாக நடித்தாலும் அதில் தொகுப்பாளராக இருக்க வேண்டும் என்பதுதான் அவருக்கு ஆசையாக இருந்தது.
அந்த வகையில் இந்த முறை குக் வித் கோமாளி சீசன் 5 மணிமேகலை தொகுப்பாளராக களமிறங்கினார். ஆனால் தற்சமயம் குக் வித் கோமாளியை விட்டு விலகிய மணிமேகலை சில சர்ச்சையான தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறும் பொழுது குக் வித் கோமாளியில் இருக்கும் இன்னொரு தொகுப்பாளர் தொடர்ந்து என்னை கேலி செய்து வருகிறார். எப்போதெல்லாம் தொகுப்பாளராக வந்து பேச வருகிறானோ அப்போதெல்லாம் என்னை அவமானப்படுத்துகிறார்.
ஆதரவு தெரிவித்த கோமாளி
இது குறித்து நான் அவரிடமே நேரடியாக கூறிவிட்டேன். மேலும் புரொடக்ஷன் டீமிலும் கூறினேன் ஆனால் அவர்களிடம் கூறும் பொழுது அவர்கள் அவர் பெரிய ஆளு அவரை பகைத்துக் கொள்ளாதே என்றெல்லாம் கூறினார்கள்.
எனக்கு சுயமரியாதை என்பது மிக முக்கியம் அவர்களுக்கு நிறைய நிகழ்ச்சிகளை கொடுக்கட்டும். அப்பொழுதுதான் அவர்கள் வளர்ந்து வருபவர்களையாவது விட்டு வைப்பார்கள் என்று மறைமுகமாக விஜே பிரியங்காவை தாக்கி பேசியிருந்தார் மணிமேகலை.
இந்த நிலையில் இதற்கு பலரும் ஆதரவு தெரிவிக்க துவங்கியிருக்கின்றனர். குக் வித் கோமாளியில் சக கோமாளி ஆன குரேஷியும் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
பிறகு அவரே அந்த பதிவை டெலிட் செய்து விட்டார். இதற்கு என்ன காரணம் என்று இப்பொழுது பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.
