அந்த ஒரு ரூல்ஸ் போட்டதால வேணாம்னு சொல்லிட்டேன்… விஜய் பட வாய்ப்பை நிராகரித்த புகழ்.. இதுதான் காரணம்..!

தமிழ் சினிமாவில் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து அதிக பிரபலம் அடைந்தவர் விஜய் டிவி புகழ். விஜய் டிவியில் இருந்து நிறைய பேர் சினிமாவிற்கு வந்து பிராபலம் அடைந்திருக்கின்றனர் அந்த வகையில் புகழும் முக்கியமானவர்.

பெரும்பாலும் புகழ் நல்ல காமெடி செய்யக்கூடியவர் என்பதாலேயே அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன ஆரம்பத்தில் விஜய் டிவியில் நடந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சின்ன சின்ன நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் புகழ்.

விஜய் டிவி புகழ்:

அதனை தொடர்ந்து அதிகபட்சம் அவருக்கு பெண்ணாக நடிப்பதற்காக வாய்ப்புகள் கிடைத்தன. இதற்காகவே தனது தாயிடம் சென்று நிறைய புடவைகளை எடுத்துக் கொண்டு வருவார் என்று அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

அப்படி எல்லாம் நடித்து பிரபலம் அடைந்த புகழ் அதற்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அவரை பெரிய அளவில் புகழடைய செய்தது. அதனை தொடர்ந்து இப்பொழுது சினிமாவிலும் நடித்து வருகிறார்.

Social Media Bar

ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் புகழ். இதற்கு நடுவே கோலிசோடா திரைப்படத்தின் அடுத்த பாகம் படமாக்கபட்டு வருகிறது. அந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் முதன்முதலாக நடித்திருக்கிறார் புகழ்.

பெரிய பட வாய்ப்பு:

இப்படி மாற்று வேடங்களில் நடிப்பதன் மூலமாக ஒரு குணசித்திர நடிகராக இவர் உருவாகலாம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் ஆரம்பத்தில் பெரிய படத்தில் வந்த வாய்ப்பை நிராகரித்த விஷயத்தை புகழ் பேட்டியில் கூறி இருக்கிறார்.

அதாவது மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கும்போது அதில் புகழும் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அந்த சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருக்கும் ஆட்களில்  இவருக்கும் ஒரு கதாபாத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஆனால் அதில் நடிக்க வேண்டும் என்றால் முடியை வெட்டிக் கொள்ள வேண்டும் என்று கூறியதால் அதனை அந்த வாய்ப்பை நிராகரித்திருக்கிறார் புகழ். ஏனெனில் அந்த முடியின் மூலமாக தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றேன். அதை என்னால் எடுக்க முடியாது என்று கூறி வாய்ப்பை நிராகரித்து விட்டேன் என்று கூறி இருக்கிறார் புகழ்.