News
இங்கெல்லாம் மனுசன் இருப்பானா!.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய பிரபலம்.. புதிதாக எண்ட்ரி கொடுத்த விஜய் டிவி செலிபிரிட்டி!..
விஜய் டிவியில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு அதிகமான பார்வையாளர்கள் உண்டு என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தான்.
கடந்த நான்கு சீசன்களாக வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த குக் வித் கோமாளி தற்போதைய ஐந்தாவது சீசனில் அதிக பிரச்சனைகளை கண்டு வருகிறது.

ஏற்கனவே சிவாங்கி மாதிரியான கோமாளிகள் இதில் இடம் பெறவில்லை மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மீடியா மெசன் நிறுவனம் விஜய் டிவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சன் டிவிக்கு சென்று விட்டது. அங்கே டாப் குக் டூப்பு குக் என்னும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
சன் டிவிக்கு சென்ற நிறுவனம்:
சன் டிவிக்கு சென்றதை அடுத்து இந்த நிகழ்ச்சியை நடத்துவது சிரமமாகிவிட்டது. இருந்தாலும் விஜய் டிவி இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வந்தது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கு பெற்று வந்த காமெடியனான நாஞ்சில் விஜயன் கம்பெனியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிவிட்டார். மேலும் அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது அந்த நிறுவனம் சரியில்லை நான் அவர்கள் நடத்தும் எந்த நிகழ்ச்சியும் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டார்.

இதனை தொடர்ந்து கோமாளியாக புதிதாக ஒரு நபரை கொண்டு வர வேண்டும் அல்லவா? அதற்காக ஏற்கனவே விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அறந்தாங்கி நிஷாவை கோமாளியாக களம் இறக்க முடிவு செய்து இருக்கின்றது விஜய் டிவி.
