TV Shows
அவுத்து போட்டா சான்ஸ் கிடைக்குமா? நெட்டிசன்களை நேரடியாக விமர்சித்த சிவாங்கி.!
சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. ஆரம்பத்தில் விஜய் டிவியில் பாடகியாக அறிமுகமானாலும் கூட போக போக இவருக்கு வரவேற்புகள் கிடைக்க துவங்கின.
அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார் சிவாங்கி. அப்படியாகதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவர் கலந்துக்கொண்டார். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவர்கள் நினைத்ததை விடவுமே நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
இப்போது வரை விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளில் முக்கிய இடத்தை குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிடித்துள்ளது. இந்த நிலையில் குக் வித் கோமாளிக்கு பிறகு சிவாங்கிக்கு பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.
நாய் சேகர் ரிட்டன்ஸ், டான் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு சென்ற சிவாங்கி அங்கிருந்து புகைப்படங்களை வெளியிட்டார். அது கொஞ்சம் கவர்ச்சியாக இருந்தது.
இந்த நிலையில் இதனை பார்த்த நெட்டிசன்கள் அதற்கு எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளனர். சமீபத்தில் அதற்கு பதிலளித்த சிவாங்கி கூறும்போது ”அவுத்து போட்டு போட்டோ போட்டா வாய்ப்பு கிடைக்குமா? என்ன மனநிலை இது.
அப்படினா அவுத்து போட்டு போட்டோ போடுற எல்லோரும் வாய்ப்பு வாங்கிடுறாங்களா. பெரும்பாலும் நான் டைட்டான உடையே போட மாட்டேன். ஏன்னா அது என்னை குண்டா காட்டும். ஆனால் அன்னைக்கு அந்த உடை நன்றாக இருந்தது.
அதனால்தான் போட்டோ போட்டேன். வாய்ப்பு வாங்க வேண்டும் என்றெல்லாம் போட்டோ போடவில்லை. அதற்காக காலம் முழுக்க சுடிதார் மட்டுமே போட்டு கொண்டிருக்க முடியாது இல்லையா என கூறியுள்ளார் சிவாங்கி.
