Cinema History
அந்த அம்மா இறந்துட்டாங்க.. குடும்பம் காசில்லாம இருக்கு!.. உடனே கிளம்பிய விஜயகாந்த்!.
கிராமத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிகராக வேண்டும் என வந்த இளைஞர்களில் முக்கியமானவர் விஜயகாந்த். எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் அனைவருக்கும் நல்லது செய்யும் ஒரு நபராக பார்க்கப்பட்டவர் விஜயகாந்த்.
இவர் பலருக்கும் நன்மைகள் செய்துள்ளார். அதில் நாம் பேட்டிகள் மாதிரியான விஷயங்களில் பார்ப்பவை குறைவானவையே பலருக்கும் தெரியாமல் அவர் செய்த நன்மைகள் ஏராளம். மீசை ராஜேந்திரன் ஒரு முறை பேட்டியில் பேசும் பொழுது ர் விஜயகாந்த் செய்த ஒரு விஷயத்தை கூறியிருந்தார்.
தமிழில் சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகை தேனி குஞ்சரம்மாள். அதிகபட்சம் பாட்டி கதாபாத்திரங்களில் இவரை பார்க்க முடியும். மேலும் சில படங்களில் பாடல்களும் பாடியிருக்கிறார். இவர் பாடிய பேட்டை ராப் பாடல் மிகவும் பிரபலமானதாகும்.
இவர் இறந்த பொழுது இவரது குடும்பம் வறுமையில் இருந்தது. எனவே குஞ்சரம்மாளின் மகள் விஜயகாந்திற்கு போன் செய்து தன்னுடைய பண கஷ்டத்தை தெரிவித்துள்ளார். இதை அறிந்ததும் விஜயகாந்த் மீசை ராஜேந்திரனை போன் செய்து அழைத்து அவரிடம் ஒரு பணக்கட்டை அப்படியே கொடுத்து இதை தேனி குஞ்சரம்மாளின் மகளிடம் கொடுத்துவிட்டு ஒரு மாலை வாங்கி போட்டுவிட்டு வாருங்கள் என்று கூறியிருக்கிறார்.
முக்கியமாக யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் சென்று அந்த பணத்தை கொடுத்து விட்டு வர சொல்லியுள்ளார். அந்த அளவிற்கு தான் உதவி செய்வது மற்றவர்களுக்கு தெரிய கூடாது என நினைத்திருந்தார் கேப்டன் விஜயகாந்த்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்