Cinema History
கீழ விழுந்தாலும் பரவாயில்லை!.. அடுக்கு மாடியில் உயிரை பணயம் வைத்து கேப்டன் நடித்த காட்சி!..
தமிழில் ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக செய்யும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் நடிக்கும் அனைத்து சண்டை காட்சிகளுமே எப்போதுமே தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றவை.
முக்கியமாக டூப் போட்டு நடிப்பது விஜயகாந்துக்கு அவ்வளவாக பிடிக்காது அதனால்தான் சிரமமாக இருந்தாலும் கூட கயிறை கட்டிக்கொண்டு பல காட்சிகளை நடித்திருப்பார். கயிறை கட்டிக்கொண்டு நடிக்கிறார் என்று பலமுறை கேலிக்கு உள்ளானாலும் தனது மொத்த எடையையும் கயிறை கட்டி தாங்கிக் கொண்டு சண்டை காட்சிகள் நடிப்பது எளிதான காரியம் அல்ல.

இருந்தாலும் கூட பல கடினமான காட்சிகளையும் விஜயகாந்த் நடித்துள்ளார். முக்கியமாக தென்னவன் திரைப்படத்தில் அடுக்கு மாடியில் ஒரு காட்சி வரும் அதில் கம்பியில் சுற்றிக்கொண்டு வந்து விஜயகாந்த் சண்டை போடுவது போன்ற காட்சி வரும்.
அப்பொழுது கம்பி மொட்டை மாடியில் வெளிப்புறம் வரை நீட்டியிருக்கும் அதை பிடித்துக் கொண்டு சுற்றி வந்து விஜயகாந்த் உதைப்பது போல காட்சி இருக்கும். அந்த காட்சிக்கு ஒரு டூப்பைதான் நடிக்க வைக்க இருந்தனர் ஏனெனில் அடுக்குமாடிக்கு கீழே எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதால் டூப்புக்கு ஒரு ஆளை நடிக்க வைக்க இருந்தனர்.
ஆனால் விஜயகாந்த் அவரும் ஒரு உயிர் தானே நானே அந்த காட்சியை நடிக்கிறேன் என்று கூறி அவரே சிறப்பாக நடித்தார். இந்த விஷயத்தை தென்னவன் திரைப்படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
