Connect with us

உங்களுக்கு மண்டைல பிரச்சனைனு நினைக்கிறேன்! – விக்ரமின் காதல் கதை தெரியுமா?

Cinema History

உங்களுக்கு மண்டைல பிரச்சனைனு நினைக்கிறேன்! – விக்ரமின் காதல் கதை தெரியுமா?

Social Media Bar

தமிழில் முன்னணி நடிகர்களாக உள்ள பலருக்கும் பின்னால் ஒரு சுவாரஸ்யமான காதல் கதை இருப்பதுண்டு. நடிகர் விக்ரமிற்கும் கூட அப்படி ஒரு காதல் கதை உண்டு.

விக்ரம் சினிமாவில் பெரிய கதாநாயகனாக ஆவதற்கு முன்பே அவரது காதல் கதை துவங்கிவிட்டது எனலாம். அப்போதுதான் அவர் சினிமாவில் வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கார் விபத்தின் காரணமாக அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஒரு பார்ட்டி ஒன்றிற்கு விக்ரம் சென்றுள்ளார். அங்குதான் அவரது மனைவி சைலஜாவை சந்தித்துள்ளார். சைலஜாவை பார்த்தவுடன் விக்ரமிற்கு பிடித்துவிட்டது. அப்போது காலால் நடக்க முடியாமல் ஒரு வாலிபர் இருக்கிறாரே என சைலஜா விக்ரமிடம் போய் பேசியுள்ளார்.

அப்போது தான் சைக்காலஜி படிப்பதாக கூறிய சைலஜா பதிலுக்கு விக்ரமிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு விக்ரம் “நான் சினிமாவில் முயற்சி செய்து வருகிறேன். இன்னும் கொஞ்ச காலத்தில் நான் பெரும் கதாநாயகனாக போகிறேன்” என கூறியுள்ளார்.

அதை கேட்ட சைலஜா இவருக்கு ஏதோ மனநோய் இருக்கிறது என நினைத்துக்கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் தொடர்ந்து பழக்கம் ஏற்பட்டு காதலாகியுள்ளது. இதை விக்ரம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top