Connect with us

விஜய்யால் எனக்கு வந்த அடையாளம் வேண்டாம்னு நினைச்சேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த விக்ராந்த்!..

actor vikranth

News

விஜய்யால் எனக்கு வந்த அடையாளம் வேண்டாம்னு நினைச்சேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த விக்ராந்த்!..

Social Media Bar

Actor Vikranth: தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக தனக்கென தனி இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விக்ராந்த். 1991 லேயே மம்முட்டி நடித்த அழகன் திரைப்படத்தில் மம்முட்டிக்கு மகனாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் விக்ராந்த்.

அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு வெளிவந்த கற்க கசடற என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விக்ராந்த். ஆனால் அந்த திரைப்படம் அப்போது பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

இருந்தாலும் கூட விடாப்பிடியாக பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இதனால் இவர் மக்கள் மத்தியில் தெரியக்கூடிய அளவில் ஒரு கதாநாயகனாக இருந்தார். அதிலும் இவர் நடித்த பாண்டியநாடு, கவண், கெத்து போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் சினிமாவிற்கு வந்த காலம் முதலே பலரும் இவரை விஜய்யின் தம்பி என்றே கூறி வந்தனர். ஏனெனில் இவர் பார்ப்பதற்கு நடிகர் விஜய்யின் சாயலிலேயே இருந்தார். இதுக்குறித்து ஒரு பேட்டியில் பேசிய விக்ராந்த் கூறும்போது என்னை ஆரம்பம் முதலே பலரும் விஜய்யின் தம்பி என்றே கூறி வந்தனர்.

அதனால் எனது பெயரே சினிமாவில் பதிவாகாமல் போனது. நான் எனக்கென தனி அடையாளத்தை பெற வேண்டும் என நினைத்தேன். அப்படியாக மக்கள் மத்தியில் விக்ராந்த் என்கிற பெயர் பதிவாக கிட்டத்தட்ட 11 வருடம் ஆகியுள்ளது என கூறியுள்ளார் விக்ராந்த்.

To Top