டிக்கெட் காசில் விவசாயிகளுக்கு கொடுக்க போறேன்!.. விஷால் சொன்னது உருட்டா!.. உண்மையா?

News Tamil Cinema News

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். விஷால் நடித்த திரைப்படங்கள் தற்சமயம் பெரிதும் வரவேற்பை பெறாமலே இருந்தன. இதற்கு முன்பு வந்த லத்தி திரைப்படத்திற்கு கூட பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில் விஷாலுக்கு ஒரு கம் பேக்காக மார்க் ஆண்டனி திரைப்படம் அமைந்துள்ளது. இதனை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இதுவே முதல் ஹிட் படமாகும். இதற்கு முன்பு இவர் மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

ஆனால் அந்த மூன்றுமே அவ்வளவாக வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் தற்சமயம் நல்ல வசூல் சாதனை படைத்து வருகிறது மார்க் ஆண்டனி. இதுக்குறித்து பேட்டி அளித்த விஷால் ஒவ்வொரு டிக்கெட் காசிலும் ஒரு ரூபாயை நான் விவசாயிகளுக்கு கொடுக்க போகிறேன் என கூறியுள்ளார்.

முதலில் இந்த படத்தின் தயாரிப்பாளர் விஷால் கிடையாது எனும்போது அவர் எப்படி டிக்கெட் காசில் இருந்து ஒரு ரூபாயை எடுத்து விவசாயிகளுக்கு கொடுக்க முடியும். அப்படி கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் அவரது சம்பளத்தில் இருந்து கொடுக்கலாமே!.. என இதுக்குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.