Bigg Boss Tamil
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாயை விட்ட வி.ஜே விஷால்.. மணிமேகலை குறித்து மீண்டும் அவதூறு.. கிளம்பிய பிரச்சனை..!
தற்சமயம் பிக் பாஸில் நல்ல போட்டியாளராக இருந்து வருபவர் வி.ஜே விஷால். ஆனால் தேவையில்லாமல் அவர் தற்சமயம் பேசியிருக்கும் விஷயம் மீண்டும் ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அமைந்து இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்கும் பிக் பாஸை போலவே எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக செய்திகள் பரவின.
வாயை விட்ட வி.ஜே விஷால்:
அதனை உறுதிப்படுத்தும் வகையில் மணிமேகலையும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த பிரச்சனையில் பல விஜய் டிவி பிரபலங்களின் பெயர்கள் சிக்கியது. ஒரு வழியாக பிக் பாஸ் தொடங்கிய பிறகு இந்த பிரச்சினை அடங்கியது.
ஆனால் வி.ஜே விஷால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று தற்சமயம் அங்கே ஜெஃப்ரியுடன் சேர்ந்து கலந்துரையாடும் பொழுது மணிமேகலை மேல்தான் தவறு என்பதாக பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது மணிமேகலை தேவை இல்லாமல் அவசரப்பட்டு வீடியோவை வெளியிட்டு விட்டார்.
ஆனால் அப்பொழுதும் கூட பிரியங்கா சாந்தமாகதான் அதை கையாண்டார் பதிலுக்கு அவர் எந்த ஒரு வீடியோவும் போடவில்லை என்று பிரியங்காவிற்கு ஆதரவாக பேசியிருக்கிறார். இந்த நிலையில் இந்த பிரச்சனை மீண்டும் தலை தூக்க துவங்கியிருக்கிறது.