Connect with us

யார் இந்த இட்டாச்சி உச்சிஹா… நருட்டோ ரசிகர்கள் வைப் செய்யும் நாயகன்!..

itachi uchiha

Hollywood Cinema news

யார் இந்த இட்டாச்சி உச்சிஹா… நருட்டோ ரசிகர்கள் வைப் செய்யும் நாயகன்!..

Social Media Bar

ஜப்பானிய அனிமே உலகில் பிரபலமாக இருந்து வந்த நருட்டோ என்கிற தொடர் ஒரு காமிஸின் கதையாகும். பல வருடமாக காமிஸாக வந்த நருட்டோவை தொடர்ந்து டிவி சீரிஸாக வெளியிட்டனர். ஜப்பான் மக்கள் மத்தியில் பிரபலமான நருட்டோ தற்சமயம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகி கொண்டுள்ளது.

நருட்டோவில் வரும் சாசுக்கே உச்சிஹா என்னும் முக்கிய கதாபாத்திரத்தின் அண்ணனாக இந்த இட்டாச்சி உச்சிஹா வருகிறான். நருட்டோவில் இருக்கும் சக்திவாய்ந்த வில்லன்களின் ஒருவனாக இத்தாச்சி உச்சிஹா பார்க்கப்படுகிறான்.

உச்சிஹா வம்சாவளி:

நருட்டோவில் பல வம்சாவளிகள் வருகின்றனர். ஒவ்வொரு வம்சாவளிகளுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. அந்த குறிப்பிட்ட வம்சாவளிகளுக்கு மட்டும் சிறப்பான ஜுட்ஸு சக்திகள் இருக்கும். இந்த நிலையில் ஷேரிங்கான் என்னும் சிறப்பான ஜுட்ஸு சக்தியை கொண்டவர்கள்தான் உச்சிஹா க்ளான்ஸ்.

அந்த உச்சிஹா க்ளான்ஸிலேயே திறமையானவனாக இட்டாச்சி இருக்கிறான். இதனால் சிறு வயதிலேயே ஆம்போ ப்ளாக் காப்ஸ் என்னும் காவலர் பணியில் சேருவதற்கான வாய்ப்பை பெறுகிறான் இட்டாச்சி. தனது தம்பியான சாசுக்கே மீது பாசமாக இருக்கும் இட்டாச்சி ஒரு நாள் பாதை மாறுகிறான்.

அகாட்சுகி என்னும் குழுவில் இட்டாச்சி சேருவதே இதற்கு காரணமாக இருக்கிறது. உலகையே கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்த அகாட்சுகி குழுவின் நோக்கமாகும். நருட்டோவில் வரும் பிரபல வில்லனான ஒரோச்சிமாருவும் இந்த குழுவில் இருந்தவனே.

இந்த நிலையில் அகாட்சுகி குழுவிற்காக தனது உச்சிஹா கிராமத்தையே அழிக்கிறான் இட்டாச்சி. அதனால் அவனது அம்மா அப்பாவும் இறக்கின்றனர். தனது அண்ணனே அம்மா அப்பாவை கொன்றதால் கோபமாகும் சாசுக்கே  இட்டாச்சியை கொல்வதற்காக சபதம் எடுக்கிறான்.

ஆனால் இட்டாச்சிக்கு மட்டுமே உள்ள மாங்கிக்கோ ஷாரிங்கான் சக்தி இல்லாமல் அவனை தாக்க முடியாது. அதற்காக சக்தி வாய்ந்தவனாக மாற துவங்குகிறான் சாசுக்கே. இதற்கு நடுவே இத்தாச்சு அவன் கிராமத்தை அழித்ததற்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.

இருந்தாலும் கதை முழுவதும் வில்லனாகவே சித்தரிக்கப்படுகிறான் இட்டாச்சி உச்சிஹா.

To Top